தமிழ் அரசியல் கைதி சதாசிவம் உயிரிழப்பு.!
தமிழ் அரசியல் கைதி முத்தையா சகாதேவன் சுகயீனம் காரணமாக உயிரிழந் துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 வருடங்களாக சிறைக் கைதியாக இருந்த இவர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோதே இந்த மரணம் சம்பவித்துள்ளது. முன்னால் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டு கால தாமதம் அடைந்திருந்ததால், உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் இவர் பாதிக்கப்பட்டிருந்ததாக இவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு பிள்ளைகளின் தந்தையாகிய இவர் கொழும்பு தெமட்டகொடையைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.