Breaking News

மாணவா்களுக்கு கைக்கணினி வழங்குவது தொடர்பில் அமைச்­ச­ர­வையில் தீா்வு என்ன?.!

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று நடை­பெற்ற அமைச்­ச­ரவை சந்திப்பில் மிதக்கும் மின்­சார கப்பல் தொடர்­பிலும் மாண­வர்­க­ளுக்கு கைக்­கணினி வழங்­கு­வது தொடர்­பிலும் ஆரா­யப்­பட்­ட­போ­திலும் இறுதி முடிவு கிடைக்கவில்லை.

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்­றுக்­காலை அமைச்­ச­ரவைக் கூட்டம் இடம்­பெற்­றது. இதன்­போது மிதக்கும் மின்­சார கப்­பலை கொழும்பு துறை­மு­கத்தை ஒட்­டி­ய­ப­கு­தியில் நிறுத்­து­வ­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தை மின்­சக்தி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க சமர்ப்­பித்துள்ளாா்.

மிதக்கும் மின்­சாரக் கப்­பலை கெர­வ­லப்­பிட்டி கடற்­க­ரைப்­ப­கு­தியில் நிறுத்த முடி­யாது. அங்கு கடல் அலை அதி­க­மாக உள்­ள­மை­யினால் அதற்கான் சாத்­தி­ய­மில்லை. எனவே கொழும்பு துறை­மு­கத்தை ஒட்­டி­யப்­ப­கு­தியில் நிறுத்­து­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­ப­ட­ வேண்டும் என்று அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க வலி­யு­றுத்­தியுள்ளாா்.

இதன்­போது கருத்து தெரி­வித்த துறை­மு­கங்கள் கப்­பல்­துறை அமைச்சர் சாகல ரட்­னா­யக்க கொழும்பு துறை­மு­கத்தை அண்­டி­ய­ப­கு­தியில் மிதக்கும் மின்­சாரக் கப்­பலை நிறுத்­த­வேண்­டு­மானால் அது தொடர்பில் என்­னுடன் இது­வரை கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வில்லை.

கப்­பலின் நீளம், உயரம், அகலம் தொடர்­பிலோ அல்­லது அதன் செயற்­பா­டுகள் குறித்தோ எனக்கு எது­வுமே தெரி­யாது. அவ்­வாறு இருக்­கையில் எவ்­வாறு துறை­மு­கப்­ப­கு­தியில் கப்­பலை நிறுத்­து­வ­தற்கு அனு­ம­திக்க முடியும்.

இக் கப்­பலை அப்­ப­கு­தியில் நிறுத்­தினால் வேறு கப்­பல்கள் நங்­கூ­ர­மி­டு­வ­தற்கு அப்­ப­கு­தியை நாம் பயன்­ப­டுத்த முடி­யாது. எனவே இந்த செயற்­பாட்­டிற்கு அனு ­ம­திக்க முடி­யாது. என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். இத­னை­ய­டுத்து இரு அமைச்­சர்­க­ளுக்­கு­மி­டையில் வாக்­கு­வாதம் நடைபெற்­றுள்­ளது.

இரண்டு அமைச்­சுக்­களின் செய­லா­ளர்கள் மற்றும் நிதி அமைச்சின் செய­லாளர் ஆகியோர் ஒன்­றி­ணைந்து கலந்­து­ரை­யாடி ஓர் இணக்­கப்­பாட்­டிற்கு வந்­ததன் பின்னர் அடுத்­த­வாரம் இந்த அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தை சமர்ப்­பிக்­கு­மாறும் அப்­போது இவ்­வி­டயம் தொடர்பில் தீர்­மானம் ஒன்­றுக்கு வருவோம் என்றும் ஜனா­தி­பதி இதன்­போது தெரி­வித்­துள்ளாா்.

கைக்­க­ணனி விவ­காரம் இதே­வேளை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம் உயர்­தர மாண­வர்­க­ளுக்கு கைக்­க­ணணி வழங்­கு­வ­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தை மீண்டும் சமர்ப்­பித்­துள்ளார்.

நீண்­ட­கா­ல­மாக இழு­பறி நிலையில் இருந்த பத்­தி­ரத்தை சமர்ப்­பித்த அமைச்சர் முதற்­கட்­ட­மாக நாட்­டி­லுள்ள 375 தேசிய பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு இதனை வழங்­கு­வ­தற்­கான அனு­ம­தி­யினை தர­வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தற்­போ­தைய நிலையில் டொலரின் விலை அதி­க­ரித்­துள்­ள­மை­யினால் இந்தத் திட்­டத்­திற்கு மேல­தி­க­மாக 2000 மில்­லியன் ரூபா அதி­காக தேவைப்­ப­டு­வ­தா­கவும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டியுள்ளாா்.

அமைச்­சரின் பத்­தி­ரத்­திற்கு ஆத­ர­வாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கருத்து தெரி­வித்­துள்ளார். புரட்­சி­க­ர­மான இந்த வேலைத்­திட்­டத்­திற்கு அனு­மதி வழங்­கப்­ப­ட­வேண்டும். என்று பிர­தமர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். ஜப்பான், கொரியா, சிங்­கப்பூர் ஆகி­ய­நா­டு­களில் இத் திட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்ளதாக அமைச் சர்கள் பலரும் தெரிவித்துள்ளனா்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனா திபதி ஏனைய நாடுகளில் அமுலில் உள்ளது என்பதற்காக எமது நாட்டில் அதனை அமுல்படுத்த முடியாது. அங்கு நடைபெறுகின்ற விடயங்கள் இங்கு நடைபெறவில்லை. இத் திட் டத்திற்கு உடனடியாக உடன்பட முடி யாது. அடுத்தவாரம் இந்த விடயம் தொடர்பில் இறுதி முடிவு எடுப்போ மெனத் தெரிவித்துள்ளாா்.