Breaking News

வெளிநாட்டு அகதிகளின் விபரங்களைச் திரட்டச் சென்ற ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.!

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளின் விபரங்களைப் பெறச்சென்ற ஊடகங்களுக்கு இன் றும் அனுமதி கிடைக்கவில்லை.

படையினர் ,பொலிசார் அனுமதிய ளித்த போதிலும் யூ.என்.எச்.சி.ஆர் அனுமதி யளிக்கவில்லை. இதனால் விபரங்கள் பெறச் சென்ற ஊடகவிய லாளர்கள் விபரங்களைப் பெற்றுக் கொள்ளாமல் யூ.என்.எச்.சி.ஆர் ஊடாக அனுமதி பெற்றுவருமாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

நாட்டில் நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதலையடுத்து நீர்கொழும்பில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெளிநாட்டு அகதிகள் வவுனியாவிற்கு இர வோடு இரவாக அழைத்து செல்லப்பட்டு பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள் ளனர்.

அரசாங்கத்தின் இச் செயற்பாட்டிற்கு பல்வேறு அமைப்புக்களிடமிருந்தும், அர சியல்வாதிகளிடமிருந்தும், சமயத்தலைவர்களிடமிருந்தும் எதிர்ப்புக்கள் வெளிவந்திருந்தன. கடந்த 22.05.2019 அன்று 35 அகதிகள் அழைத்து வரப்பட்டு வவுனியாவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இங்கு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளது குறித்து மாவட்ட அரசாங்க அதிபருக்கு எவ்வித தகவல்களையும் வழங்கியிருக்கவில்லை. அக திகளின் விபரங்கள் வழங்கப்படவில்லை.

முன்னர் தங்கியிருந்த அகதிகளுடன் மீண்டும் 45பாகிஸ்தான் நாட்டவர்களும், 32ஆப்கானிஸ்தான் நாட்டவர்களும், மொத்தமாக 77 அகதிகள் கடந்த 31.05.2019 அன்று அதிகாலை வவுனியாவிற்கு அழைத்துவரப்பட்டு தங்கவைக்கப்பட் டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களின் நிலைமைகள் குறித்தும் விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் ஊடகங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அனுமதி வழங்கப்படவில்லை. கொழும்பிலிருந்த அகதிகளைச் சென்று பார் வையிடவும் அவர்களின் விபரங்களை பெற்றுக்கொள்ளவும் அனுமதியளிக் கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று முந்தினம் 10ற்கும் மேற்பட்ட அகதிகள் வவுனியா வைத்தியசாலைக்கு மருத்துவச் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட் டிருந்தனர்.

எனவே அகதிகளின் நிலைமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கில் இன்று பூந்தோட்டம் புனர்வு வாழ்வு நிலையப்பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளின் நிலைமைகளை அறிந்து கொள்வதற்காக சென்ற ஊடகவிய லாளர்களுக்கு விபரங்கள் வழங்காமல் யூ.என்.எச்.சி.ஆர். தொண்டு நிறுவனத் தினரிடம் அனுமதி பெற்றுவருமாறு தெரிவிக்கப்பட்டு திருப்பியனுப்பி வைக் ப்பட்டுள்ளனர்.