Breaking News

ஜப்பானுடன் இலங்கை இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட தீர்மானம்.!

பல்துறைசார் தொழில் வாய்ப்புக்களை மையப்படுத்தி ஜப்பானுடன் இலங்கை நாளை இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக பாரா ளுமன்ற உறுப்பினர் மனுஷ் நாணயக்கார தெரிவித்துள்ளாா். 

உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள தொலைத் தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட் டுத்துறை அமைச்சர் ஹரிண் பெர்ணா ன்டோ, ஜப்பான் சுகாதாரம், தொழில் உறவுகள் மற்றும் நலன்புரி அமைச்சர் மற்றும் விவசாயம், வனவியல் மற் றும் மீன்பிடித்துறை அமைச்சர் ஆகியோரின் தலைமையில் நாளை புதன் கிழமை இலங்கை நேரப்படி ஒரு மணியளவில் இந்த ஒப்பந்தம் கைச்சாத் திடப்படவுள்ளது.

14 துறைசார் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க ஜப்பானிய அரசாங் கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த தொழில் வாய்ப்புக்களை வழங்க வென பிரதானமாக 9 நாடுகள் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் ஏழாவது நாடாக இலங்கை தெரிவாகியுள்ளது.

ஜப்பான் அரசாங்கத்தால் வழங்கப்படும் இந்த பல்துறைசார் தொழில் வாய்ப் புக்கள் எமது வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்களில் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கின்றோம்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இது தொடர்பில் விளமளித்துள்ளார். பராமரிப்பு தொழிலாளர், கட்டட சுத்த முகா மைத்துவம், இயந்திர பாகம் மற்றும் கருவி இயக்க துறை, தொழில்துறைசார் இயந்திர துறை, மின்சார, மின்னணு மற்றும் தகவல் துறை, கட்டுமான துறை, கப்பல் கட்டுமானம் மற்றும் கப்பல் இயந்திர துறை,

ஒடோ மொபைல் மற்றும் பழுதுபார்த்தல் துறை, விமானத்துறை, ஹோட்டல் துறை, விவசாயம், மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு, உணவு மற்றும் குடிவகை உற்பத்தி மற்றும் உணவு பரிமாற்றல் துறை உள்ளிட்ட 14 வகையான வரையரையற்ற தொழில்வாய்ப்புக்களை ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு வழங்கவுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்களை உத்தியோக பூர்வமாக பெற்றுக்கொள்ளும் வகை யில் இருநாட்டுக்கும் இடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு நாளை புதன் கிழமை ஜப்பானில் இடம்பெறும். இந்த ஒப்பந்த்தில் அமைச்சர் ஹரிண் பெர்ணான்டோ கைசாத்திடவுள்ளார்.

குறித்த ஒப்பந்தம கைச்சாத்திட்டது முதல் எதிர்வரும் 10 வருடங்களுக்கு மாத்திரமே செலுப்படியானதாக இருக்கும். மேலும் ஜப்பானுடனான இந்த ஒப்பந்த்தினூடாக திறமையான உள்நாட்டு தொழிலாளர்களை உருவாக்கு வதற்கு ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திகொள்ள முடியும். இதற்கான பயிற்சி நடவடிக்கைகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு முன்னெடுத்து வருகிறது.

இதேவேளை தற்போதுள்ளதைவிட இன்னும் அதிகமாக தொழில் பயிற்சி களை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் எதிர்பார்க்கிறோம். அதேபோன்று இதனூடாக ஜப்பான் நாட்டின் தொழிசார் தொழில் நுட்ப அறிவுகளையும் எம் மால் பெற்றுக்கொள்ள கூடியதாக அமைவதோடு அந்த நாட்டு தொழில் நிபு ணர்களின் பயற்சிகளையும் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும். ஜப்பான் அரசாங்கத்தால் இவ்வாறான தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றமை விசேட அம்சமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.