Breaking News

பிரதமர் ரணிலின் அரசியல் எதிர்காலம்

இலங்­கையின் அண்­மைக்­கால அர­சியல் வர­லாற்றில் கட்­சி­யொன்றின் தலை­வ­ராக மிகவும் நீண்­ட­காலம் தொடர்ச்­சி­யாக இருந்­து­ வ­ரு­பவர் என்றால் அது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே. ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வ­ராக அவர் சுமார் கால் ­நூற்­றாண்­டாக பதவி வகிக்கின்றாா். 

அதே­வேளை, ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வர்­க­ளாக இருந்­த­வர்­களில் எவரும் பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்­க­வைப்­போன்று தலை­மைத்­து­வத்­துக்கு எதி­ரான உள்­கட்சி கிளர்ச்­சி­க­ளுக்கு அடிக்­கடி முகங்­கொ­டுத்­த­தில்லை. ஆனால், அந்த கிளர்ச்­சி­களை முறி­ய­டித்து தலைவர் பத­வியை அவரால் காப்­பாற்­றக்­கூ­டி­ய­தாக இருந்­து­ வந்­தி­ருக்­கி­றது.

இலங்­கையின் அர­சி­யல்­வா­தி­களில் கூடு­த­லான கால­மாக பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சித் தலை­வ­ரா­கவும் அவரே இருந்­தி­ருக்­கிறார். பாரா­ளு­மன்­றத்தில் தொடர்ச்­சி­யாக 42 வரு­டங்­க­ளாக உறுப்­பி­ன­ராக இருந்­து­வரும் பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மைத்­து­வத்தின் கீழ் ஐக்­கிய தேசிய கட்சி வந்த பிறகு அதன் வேட்­பாளர் ஜனா­தி­பதி தேர்­தலில் ஒரு­போ­துமே வெற்­றி­பெற்­ற­தில்லை.

இறு­தி­யாக நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தி­யாக பத­வியில் இருந்த ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் ரண­சிங்க பிரே­ம­தா­சவே இருந்தார். 1994 நவம்பர் ஜனா­தி­பதி தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்­சியின் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்ட காமினி திசா­நா­யக்க கொழும்பில் தேர்தல் பிர­சா­ரக்­கூட்­ட­மொன்றில் இடம்­பெற்ற தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தலில் கொல்­லப்­பட்­டதை அடுத்து பதில் வேட்­பா­ள­ராக விக்­கி­ர­ம­சிங்க கள­மி­றங்க முன்­வ­ர­வில்லை.

திசா­நா­யக்­கவின் விதவை மனைவி சிறி­மாவே ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மை­யி­லான மக்கள் முன்­ன­ணியின் வேட்­பா­ள­ரான அன்­றைய பிர­தமர் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவை எதிர்த்து போட்­டி­யிட்டார். ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மைப்­பொ­றுப்பை அதற்குப் பிறகு ஏற்­றுக்­கொண்ட விக்­கி­ர­ம­சிங்க 1999 டிசம்பர் ஜனா­தி­பதி தேர்­த­லி­லேயே முதன் முதலில் போட்­டி­யிட்டார். அதில் அவரால் வெற்றி பெற­மு­டி­ய­வில்லை.

ஆனால், முன்னாள் ஜனா­தி­பதி குமா­ர­துங்­கவின் ஆட்­சிக்­கா­லத்தில் 2001 டிசம்­பரில் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­னணி வெற்­றி­பெற்­ற­தை­ய­டுத்து விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ராக இரண்­டா­வது தட­வை­யாக பத­வி­யேற்றார்.

ஜனா­தி­பதி பிரே­ம­தாச கொழும்பில் 1993 மே தினத்­தன்று தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தலில் கொல்­லப்­பட்­ட­தை­ய­டுத்து அப்­போது பிர­த­ம­ராக இருந்த டி.பி.விஜே­துங்க ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்க விக்­கி­ர­ம­சிங்க முதல் தட­வை­யாக பிர­த­ம­ரானார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

2005 நவம்பர் ஜனா­தி­பதித் தேர்­தலில் விக்­கி­ர­ம­சிங்க இரண்­டா­வது தட­வை­யாக போட்­டி­யிட்டார். அதிலும் அவரால் வெற்றி பெற­மு­டி­யாமல் போய்­விட்­டது. சுதந்­திரக் கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் முன்­ன­ணியின் வேட்­பா­ள­ரான அன்­றைய பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷவே அந்த தேர்­தலில் வெற்­றி­பெற்றார்.

விடு­தலைப் புலிகள் தமிழ்ப்­ப­கு­தி­களில் தேர்­தலை பகிஷ்­க­ரிக்க வாக்­கா­ளர்­களை நிர்ப்­பந்­திக்­க­வில்­லை­யென்றால், விக்­கி­ர­ம­சிங்க அந்த தேர்­தலில் சுல­ப­மாக வெற்­றி­பெற்­றி­ருக்­க­மு­டியும் என்று நம்­பப்­பட்­டது. அடுத்­த­டுத்து இரண்டு தட­வைகள் ஜனா­தி­பதி தேர்­தல்­களில் தோல்­வி­கண்­ட­தற்கு பிறகு ' சூடு­கண்ட பூனை அடுப்­பங்­க­ரையை நாடாது' என்­பது போல ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வதைத் தவிர்த்­துக்­கொண்டார்.

உள்­நாட்டுப் போரில் பாது­காப்பு படைகள் விடு­தலைப் புலி­களை தோற்­க­டித்த பின்­பு­லத்தில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் மக்கள் செல்­வாக்கு தென்­னி­லங்­கையில் உச்­ச­நி­லையில் இருந்­தது. தனக்கு வாய்ப்­பான அந்த சூழ்­நி­லையில் உரிய காலத்­துக்கு முன்­கூட்­டியே 2010 ஜன­வ­ரியில் ஜனா­தி­பதி தேர்­தலை நடத்­தினார்.

இரண்­டா­வது பத­விக்­கா­லத்­துக்கு மக்­களின் ஆணையைப் பெறு­வதே அவரின் திட்டம். போரின் முடி­வுக்குப் பின்­ன­ரான நாட்­களில் ராஜ­பக் ஷ சகோ­த­ரர்­க­ளுடன் முரண்­பட்­டுக்­கொண்ட முன்னாள் இரா­ணு­வத்­த­ள­பதி சரத் பொன்­சே­கா­வையே எதி­ர­ணியின் பொது­வேட்­பா­ள­ராக ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக் ஷ­வுக்கு எதி­ராக கள­மி­றக்க விக்­கி­ர­ம­சிங்க இணங்­கிக்­கொண்டார்.

அந்த தேர்­தலில் சிங்­கள மக்கள் என்ன கார­ணத்­துக்­காக ராஜ­பக் ஷவை அமோ­க­மாக ஆத­ரித்­தார்­களோ அதற்கு எதி­ரீ­டான கார­ணத்­துக்­காக வடக்கு, கிழக்கில் மாத்­தி­ர­மல்ல, மலை­ய­கத்­திலும் தமி­ழர்கள் பொன்­சே­கா­வுக்கு பெரு­ம­ளவில் வாக்­க­ளித்­தார்கள்.

ராஜபக் ஷ­வினால் முன்னாள் இரா­ணுவத் தள­ப­தியை சுல­ப­மாகத் தோற்­க­டிக்­கக்­கூ­டி­ய­தாக இருந்­தது. ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வ­ருக்கு தேவைப்­பட்­டது பொன்­சே­காவின் வெற்­றி­யல்ல, ஜனா­தி­பதி ராஜ­பக் ஷ­வுக்கு கிடைக்­கக்­கூ­டிய தேர்தல் வெற்­றி­யினால் அர­சி­யல்­ரீ­தியில் பின்­ன­டைவைச் சந்­திப்­பது தானாக இருக்­கக்­கூ­டாது என்­ப­தே­யாகும்.

மீண்டும் அதே ' தந்­தி­ரோ­பா­யத்தின்' அடிப்­ப­டையில் 2015 ஜன­வரி ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்­சியின் வேட்­பா­ள­ராகத் தான் கள­மி­றங்­காமல் எதி­ர­ணியின் பொது­வேட்­பாளர் என்ற போர்­வையில் வேறு ஒரு­வரை நிறுத்­து­வ­தற்கு விக்­கி­ர­ம­சிங்க உடன்­பட்டார்.

ஜனா­தி­ப­தியின் இரு பத­விக்­கால வரை­ய­றையை இல்­லா­தொ­ழித்து ஜனா­தி­ப­தி­யாகப் பதவி வகிக்கும் ஒருவர் எத்­தனை தட­வை­களும் தேர்­தல்­களில் போட்­டி­யி­டு­வ­தற்கு வச­தி­யாக தனது இரண்­டா­வது பத­விக்­கா­லத்தின் ஆரம்­பக்­கட்­டத்தில் அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தத்தை கொண்­டு­வந்த மஹிந்த ராஜ­பக் ஷ மூன்­றா­வது பத­விக்­கா­லத்­துக்கு மக்­களின் ஆணையைப் பெறு­வ­தற்­காக அந்த தேர்­த­லையும் உரிய காலத்­துக்கு முன்­கூட்­டியே நடத்­தினார்.

அதில் அவரின் அர­சாங்­கத்தில் மூத்த அமைச்­சர்­களில் ஒரு­வ­ரா­கவும் சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லா­ள­ரா­கவும் இருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன எதி­ர­ணியின் பொது­வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கப்­பட்­டதும் அவர் ராஜ­பக் ஷவைத் தோற்­க­டித்து ஜனா­தி­ப­தி­யா­கி­யதும் பிறகு விக்­கி­ர­ம­சிங்­கவின் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து அவர் அமைத்த ' நல்­லாட்சி' யின் இலட்­ச­ணங்கள் எல்லாம் அண்­மைக்­கால வர­லாறு.

இப்­போது எழு­கின்ற முக்­கி­ய­மான கேள்வி; மீண்டும் ஒரு தடவை பிர­தமர் விக்­கிர­ம­சிங்­க­வினால் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தி­லி­ருந்து நழுவ முடி­யுமா? எதிர்­வரும் டிசம்பர் இரண்­டா­வது வாரத்­துக்கு முன்­ன­தாக ஜனா­தி­பதி தேர்தல் நடத்­தப்­ப­ட­வேண்­டி­ய­தாக இருக்­கி­றது.

அதற்கு இன்னும் ஐந்து மாதங்­களே இருக்­கின்­றன. அந்த தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­யி­லான முன்­ன­ணியின் வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கப்­ப­டக்­கூ­டி­ய­வர்கள் பற்றி பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்­கவைத் தவிர அவரின் கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் பலரும் பகி­ரங்­க­மாக பேசு­வ­தைக்­ கா­ணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது.

ஐக்­கிய தேசிய கட்­சியைச் சேர்ந்த ஒரு­வரே நிச்­சயம் வேட்­பா­ள­ராக இருப்பார் என்று சிலரும் பாரா­ளு­மன்ற சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய அல்­லது வீட­மைப்பு அமைச்­சரும் கட்­சியின் பிரதித் தலை­வ­ரு­மான சஜித் பிரே­ம­தாச வேட்­பா­ள­ராக நிய­மிக்­கப்­ப­டக்­கூ­டிய சாத்­தியம் இருப்­ப­தாக வேறு­சி­லரும் கட்­சியின் தலை­வரே போட்­டி­யி­ட­வேண்டும் என்று இன்­னொரு பிரி­வி­னரும் கூறு­கி­றார்கள்.

பிர­பல தொழி­ல­திபர் ஒரு­வரை ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கு­வது குறித்தும் பரி­சீ­லிக்­கப்­ப­டு­வ­தாக சில வாரங்­க­ளுக்கு முன்னர் செய்­திகள் பெரி­தாக அடி­பட்­டன. ஆனால், பிர­தமர் அவை பற்றி எதுவும் பேசா மல் அமை­தி­யாக இருக்­கிறார்.

ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்­ன­தாக ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மைத்­து­வத்தில் மாற்றம் செய்­யப்­ப­ட­வேண்டும் என்று நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை பிர­த­மரின் நெருக்­க­மான விசுவாசிகளில் ஒருவர் என்று பரவலாக நம்பப்படும் அமைச்சர் அஜித் பி. பெரேரா கூறியிருப்பதே விக்கிரம சிங்கவின் அரசியல் குறித்து இன்று அலசப்படுவதற்கான உடனடிக் காரணமாகும்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய ஆற்றல்கொண்ட ஒரு சில தலை வர்கள் கட்சியில் இருப்பதாகவும் அவர்களில் ஒருவரிடம் தலைமைத்து வத்தைக் கையளிக்கவேண்டும் என்றும் கட்சிக்குள் இதே கருத்தைக் கொண்ட பலர் இருப்பதாகவும் பெரேரா குறிப்பிட்டிருக்கிறார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை மாற்றவேண்டும் என்ற கோரிக்கை பிரதமர் விக்கிரமசிங்கவுக்கு பதிலாக வேறு ஒருவரைத் தலை வராக்கவேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவாக அர்த்தப்படும்?

அதுவும் அந்த மாற்றத்தை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் செய்ய வேண்டும் என்று கேட்பது விக்கிரமசிங்கவை வேட்பாளராக நிறுத்தினால் தோல்விதான் கிடைக்கும் என்று அஞ்சுவதாகத்தானே அர்த்தப்படும்!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பிரதமர் விக்கிரமசிங்க எடுக்கப்போகும் முடிவு அவரது அரசியல் எதிர்காலத்தை நிச்சயம் தீர்மானிக்கும் என்பதில் சந்தேகமில்லை.