Breaking News

இலங்கையில் இராணுவத்தளம் அமைக்கும் திட்டம் இல்லை - அமெரிக்கா

இலங்கையில் இராணுவத்தளம் எதனையும் அமைக்கும் திட்டம் அமெரிக்கா வுக்கு இல்லை. இலங்கையுடன் எந்தவொரு உடன்படிக்கை கைச்சாத்திடப் பட்டாலும் அது இலங்கையின் இறையாண்மைக்கு முழுமையான மதிப்பை வழங்கும் வகையிலேயே மேற்கொள்ளப்படுமென அமெரிக்கா தெரிவித்துள் ளது.

அமெரிக்கா 'படைகளின் நிலைப்பாடு' தொடர்பான உடன்படிக்கையின் கீழ் இலங்கையிடமிருந்து பெருமளவு இராணுவ சலுகைகளை நாடவுள்ள தாக தகவல்கள் வெளியாகியிருக் கின்றன என்று ஆங்கில பத்திரிகை யொன்று வெளியிட்டிருந்த செய்தி தொடர்பில் இலங்கைக்கான அமெ ரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ்ட் மறுப்பு வெளியிட்டுள்ளார்.

குறித்த பத்திரிகைச் செய்தியை மேற்கோள் காட்டி அமெரிக்க தூதுவர் தன்னு டைய டுவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளதோடு இலங்கையில் அமெ ரிக்க இராணுவ தளமொன்றை அமைக்கும் திட்டமோ அல்லது நோக்கமோ இல்லையெனத் தெரிவித்துள்ளாா்.