Breaking News

44 ஆவது கூட்­டத்­தொ­டரில் இலங்கை தொடா்பான அறிக்கை சமர்ப்­பிப்பதாக ஐ.நா. விசேட நிபுணர்

இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட அமை­தி­யான ஒன்­று­கூ­டலை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான ஐக்­கிய நாடு­களின் விசேட அறிக்­கை­யாளர் கிளமன்ட் தனது பரந்­து­பட்ட அறிக்­கையை எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் சமர்ப்­பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் சபையின் 44 ஆவது கூட்டத் தொடரில் ஐ.நா. விசேட அறி க்­கை­யாளர் இந்த பரந்­து­பட்ட விபர அறிக்­கையை சமர்ப்­பிக்­க­வுள்ளாா். 

அமை­தி­யான ஒன்­று­கூடல் நிலை மை தொடர்பில் இலங்கை எந்த மட்­டத்தில் உள்­ளது என்­பது குறித்தே அவர் தனது அறிக்­கையை சமர்ப்­பிக்­க­வி­ருக்­கிறார். கடந்­த­வாரம் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட ஐ.நா. அறிக்­கை­யாளர் பல்­வேறு பகு­தி­க­ளுக்கு விஜயம் மேற்­கொண்­ட­துடன் பல­ரையும் சந்­தித்து அமை­தி­யான ஒன்­று­கூடல் குறித்து மதிப்­பீடு செய்­தி­ருந்தார்.

தனது விஜ­யத்தின் முடிவில் கொழு ம்பில் ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்த ஐ.நா. விசேட அறிக்­கை­யாளர் அவ­ச­ர­காலச் சட்­டத்தின் நீடிப்­பா­னது அமை­தி­யான ஒன்­று­கூ­ட­லுக்கு தடை­யாக அமைந்­துள்­ள­தா­கவும் ஐக்­கிய நாடுகள் சபைக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.