Breaking News

ஒளிபரப்பு உரிமைக்கான கொடுப்பனவு அமெரிக்க வங்கிக் கணக்கில் வைப்பு.! (காணொளி)

தென்னாபிரிக்க கிரிக்கெட் விஜயத்தின் ஒளிபரப்பு உரிமைக்காக இலங்கைக்கு செலுத்தவேண்டிய இறுதிக்கட்ட கொடுப்பனவு அமெரிக்க வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக, முதல் தடவையாக தகவல் வெளியாகியுள்ளது.

நீதிமன்றில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வழங்கிய தகவலின் போது இவ்விடயம் தெரியவந்துள் ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தின் ஒளிபரப்பு உரிமை தொடர்பாக கடந்த நாட்களில் நாம் தொடர்ச்சியாக செய்தி வெளி யிட்டிருந்தோம்.

இலங்கை கிரிக்கெட் நிறுவன செயலாளரான மொஹான் டி சில்வா அனுப்பிய கடிதத்துக்கு சோனி பிக்சர்ஸ் நெட்வேர்க்ஸ் இந்தியா பிரைவட் லிமிடெட் நிறுவனம் அனுப்பிய பதிலை கடந்த 4 ஆம் திகதி நாம் வெளிக்கொணர்ந்தோம்.
தென்னாபிரிக்க கிரிக்கெட் விஜயத்தில் ஒளிபரப்பு உரிமைக்காக இலங்கைக் குக் கிடைக்கவேண்டிய இறுதிக்கட்டக் கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளது என சோனி பிக்சர்ஸ் நெட்வர்க்ஸ் இந்தியா பிரைவட் லிமிடெட் நிறுவனம் அறிவித்தது.

இது தொடர்பாக நாம் ஆராய்ந்து பார்த்தபோது தென்னாபிரிக்க விஜயத்தில் ஒளிபரப்பு உரிமைக்காக இலங்கைக்குக் கிடைக்க வேண்டிய ஒரு இலட்சத்து 87 ஆயிரத்து 84 அமெரிக்க டொலர் அமெரிக்காவில் B.B.V.A கொம்பாஸ் வங் கிக்கு 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி இந்தியாவின் டொயிஷ் வங்கியினால் அனுப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் சட்ட அதிகாரி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அளித்த வாக்குமூலத்திற்கு அமைவாக இத் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதி தொடர்பாக 2018 ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி முதல் பல சந்தர்ப் பங்களில் இந்தியாவின் டொயிஸ் வங்கியினால் B.B.V.A கொம்பாஸ் வங்கி யிடம் வினாவப்பட்டுள்ளது.

அந்த நிதி 2018 ஓகஸ்ட் 2 ஆம் திகதி B.B.V.A கொம்பாஸ் வங்கியின் 6761603874 எனும் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டு கணக்கு மூடப்பட்டுள்ளதாக சோனி பிக்சர்ஸ் நெட்வர்க்ஸ் நிறுவனத்திடம் B.B.V.A கொம்பாஸ் வங்கி தெரிவித் துள்ளது.

இந்த அறிவிப்பு 2018 ஒக்டோபர் 18 ஆம் திகதி விடுக்கப்பட்டுள்ளதுடன் அதனை குறிப்பிட்டு டொயிஸ் வங்கி ஊடாக சோனி பிக்சர்ஸ் நெட்வர்க்ஸ் இந்தியா நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட கடிதம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சட்ட அதிகாரியின் வாக்குமூலத்தின் பிரகாரம் அவ்வாறு அனுப்பப்பட்ட மின் னஞ்சல் கடிதத்தின் பிரதிகள் விசாரணைகளுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அவ்வாறான பின்புலத்தில் தென்னாபிரிக்க கிரிக்கெட் விஜயத்தின் இறுதிக் கட்ட கொடுப்பனவான ஒரு இலட்சத்து 87 ஆயிரத்து 84 அமெரிக்க டொலர் நிதி இலங்கைக்கு கிடைக்கவில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி சோனி பிக்சர்ஸ் நெட்வர்க்ஸ் இந்தியா நிறுவனத்துக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிதி செலுத்தப்பட்டுள்ளதாக சோனி பிக்சர்ஸ் நெட்வேர்க்ஸ் இந்தியா நிறுவனம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இலங்கை கிரிக்கெட் நிறுவன சட்ட அதிகாரியின் வாக்குமூலம் தொடர்பாக கவனம் செலுத்தும்போது இலங்கை கிரிக்கெட் நிறுவன செய லாளர் 6 மாதங்களின் பின்னர் இந்தக் கடிதத்தை சோனி பிச்சர்ஸ் நெட்வர்க்ஸ் இந்தியா நிறுவனத்துக்கு அனுப்பியது எந்த நோக்கத்திற்காக எனும் சந்தேகம் எழுகின்றது.

சோனி பிக்சர்ஸ் நெட்வேர்க்ஸ் இந்தியா நிறுவனம் இலங்கை கிரிக்கெட் நிறு வனத்துக்கு குறித்த நிதி செலுத்தப்பட்டமை தொடர்பாக தெளிவாக பதிலளித் துள்ள பின்னணியில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இவ்வாறான கடிதத்தை அனுப்பியதன் மூலம் எதனை எதிர்பார்க்கின்றது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் விளையாட்டுத்துறை அமைச் சுக்கும் பாராளுமன்ற ஒளிபரப்பு குறித்தும் கொடுத்த தகவல்கள் முன்னுக்குப் பின் முரணானவை.

அப்படியாயின், இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளின் இச் செயற்பாடு தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டியது யார்?