ஆயுதப் பயிற்சி பெற்ற சஹ்ரானின் மனைவியின் சகோதரன் கைது - THAMILKINGDOM ஆயுதப் பயிற்சி பெற்ற சஹ்ரானின் மனைவியின் சகோதரன் கைது - THAMILKINGDOM
 • Latest News

  ஆயுதப் பயிற்சி பெற்ற சஹ்ரானின் மனைவியின் சகோதரன் கைது

  ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறுதின தற்கொலைத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோ தரர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளாா்.

  மொஹமட் சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரரான 28 வயதுடைய மொஹமட் அப்துல் காதர் அசிம் என்ப வரையே கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள் ளாா்.

  சந்தேக நபர் பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிமின் நுவரெலியாவில் இயங்கி வந்த பயிற்சி முகாமில் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளதாகவும் பயங்கரவாத குழுவிற்கு உதவிகள் வழங்கியுள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள னா்.

  குறித்த நபர் நுவரெலியாவின் கட்டுபெத்த பகுதியில் வைத்து நேற்று திங்கட் கிழமை இரவு 10.30 மணியளவில் கைது செய்துள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன் னெடுத்துள்ளனா்.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ஆயுதப் பயிற்சி பெற்ற சஹ்ரானின் மனைவியின் சகோதரன் கைது Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top