Breaking News

பிரான்ஸின் வரித் திட்ட விடயத்தை விசாரிக்குமாறு பணிப்பு - ட்ரம்ப் .!

இணையத்தளம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது வரி விதிக்கும் பிரான்ஸின் திட்டம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பணிப்புரை விடுத்துள்ளார்.

Google மற்றும் Facebook உள்ளிட்ட நிறுவனங்கள் பிரான்ஸில் ஈட்டிக் கொள்ளும் வருமானத்தின் மீது 3 வீத வரியை விதிப்பதற்கு அந்நாடு திட்ட மிட்டுள்ளது. இப் புதிய வரியை பிரெ ஞ்ச் பாராளுமன்றம் இன்றைய தினம் அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்பட் டுள்ளது.

இவ் வரியின் மூலம் இவ்வாண்டு 400 மில்லியன் யூரோவினை அதிகமாகப் பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. Digital சேவைகள் மீதான இந்த வரிவிதிப்புத் தொடர்பில் அமெரிக்கா மிகுந்த கவனம் செலுத்தியுள்ளதாகவும் இது அமெரிக்க நிறுவனங்களையே முறையற்ற விதத்தில் இலக்கு வைத் துள்ளதாகவும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

750 மில்லியன் யூரோவுக்கும் அதிகமான வருமானத்தைக் கொண்ட எந்த வொரு Digital நிறுவனமும் பிரான்ஸில் 25 மில்லியன் யூரோவை வருமான மாக ஈட்டிக்கொள்ளுமாக இருந்தால், குறித்த நிறுவனங்கள் இந்த வரி விதிப் புக்கு உள்ளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அமெரிக்க வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, நியாய மற்ற வகையில் இந்த வரிவிதிப்பு மேற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர் பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பணிப்புரை விடுத்துள்ளாா்.