நாட்டை நேசிக்கும் மாணவ சமுதாயத்தைக் கட்டியெழுப்புவோம் - ஜனாதிபதி
உயர் கல்வியை பெற்றாலும் நாட்டை நேசிக்கும் நாட்டின் மீது பற்றுடைய மாணவ சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு, நாட்டின் வரலாற்றை அவர்க ளுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நேற்று புதன் கிழமை புராதன தொழிநுட்ப நூதன சாலையை திறந்து வைத்து உரை யாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ் வாறு தெரிவித்துள்ளாா்.
எதிர்கால சந்ததியினரை சிறந்த முன்னோடிகளாக மாற்றியமைக்கும் பாதையை எமது வரலாற்றின் அனுப வங்களுக்கமைய கட்டியெழுப்ப வேண்டும். இந்த புதிய தொழிநுட்ப நூதன சாலையானது பொலன்னறுவை மாவட்ட மாணவர்களுக்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த இலங்கை மாணவர்களுக்கு வரலாற்றை எடுத்துரைக்கும் முக மாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளை வல்லுனர்களாகவும் முன்னோடிகளாகவும் திகழவைக்க நினைக்கும் பெற்றோர்கள் தத்தமது பிள்ளைகளுக்கு நாட்டின் வரலாற்றை எடுத்துரைக்க வேண்டும். இலங்கை வரலாற்றை புதிய தொழிநுட்பத்துடன் உலகிற்கு எடுத்துரைக்க இந்த புராதன தொழிநுட்ப நூதனசாலை உதவியாக அமையும்.