Breaking News

மரண தண்டனை விடயத்தில் ஜனாதிபதி தன்னிச்சையான தீா்மானம் - ஜி. எல். பீறிஸ்

மரண தண்டனை நிறைவேற்றும் விவகாரத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பிற்கு முரணாக தான் தோன்றித்தனமாக தீர்மானித் துள்ளார்.

மரண தண்டணை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு தண்டனையிணை நிறைவேற்றும் போது அரசியலமைப் பின் பிரகாரம் விதிக்கப்பட்டுள்ள ஏற் பாடுகளை ஜனாதிபதி பின்பற்றினாரா என பொதுஜன பெரமுனவின் தவி சாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்துள்ளாா்.

வஜிராஷரம விகாரையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா். 

ஜனாதிபதி மரண தண்டணை விவகாரத்தை தனது அரசியல் தேவைக்காக மாத்திரமே பயன்படுத்திக் கொள்கின்றார். போதைப்பொருள் ஒழிப்பிற்கு மரண தண்டணை ஒருபோதும் தீர்வாக அமையாது. முத்துறையில் அதிகாரங்களும் அரசியலமைப்பின் பிரகாரம் பிரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நடைமுறையில் ஜனாதிபதி நேரடியாக தனது நிறைவேற்று அதிகா ரத்தை பயன்படுத்தி நீதித்துறை சார்ந்த விடயங்களில் தீர்மானங்களை முன் னெடுப்பதாகத் தெரிவித்துள்ளாா்.