தர்ஜினியின் அசத்தலால் சிங்கப்பூரை வீழ்த்திய இலங்கை
வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரின் சிங்கப்பூர் அணியுடனான போட்டி யில் இலங்கை அணி 88-50 என்கிற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றுள் ளது.
இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் 15 ஆவது வலைப்பந்தாட்ட உலகக் கிண் ணத் தொடர் நடைபெற்றுவருகின்றது. இதில் இலங்கை உட்பட இம்முறை 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில் குழு A இல் போட்டியிடும் இலங்கை வலைப்பந்தாட்ட அணி தனது முதல் போட்டியில் சிம்பாப்வேயிடம் 79–49 என்ற அடிப்படையில் தோல்வியை சந்தித்தது.
இதனையடுத்து நடைபெற்ற வடக்கு அயர்லாந்து அணியுடனான போட்டியில் 67–-50 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வியடைந்தது. இரண்டாம் சுற்றுக்கு முன்னேற கட்டாயம் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் நடப்புச் சம்பியனான அவுஸ்திரேலிய அணியுடன் நேற்றுமுன்தினம் இலங்கை அணி மோதியது.
இப் போட்டியிலும் இலங்கை வலைப்பந்தாட்ட அணி 99–-24 என்ற புள்ளிகள் கணக்கில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளது. இந்தத் தோல்வியோடு இலங்கை வலைப் பந்தாட்ட அணி உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாம் சுற் றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
எனினும், இந்த தொடரில் 13 தொடக்கம் 16 வரையிலான இடத்தை பெறும் அணிகளை தெரிவு செய்யும் சுற்றில் சிங்கப்பூர், பிஜி மற்றும் சமோவா ஆகிய நாடுகளுடன் தொடர்ந்து விளையாடும் சந்தர்ப்பத்தை பெற்றுள்ளது. அதன்படி இந்த சுற்றில் தமது முதல் போட்டியிலேயே இலங்கை வலைப்பந்து அணி, சிங்கப்பூர் வலைப்பந்து அணியினை எதிர்கொண்டிருந்தது.
லிவர்பூலின் எம்.எஸ் வங்கி அரங்கில் நேற்றைய தினம் ஆரம்பமான இப் போட்டியில் இலங்கை அணி 88-50 என்கிற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி சார்பாக தர்ஜினி சிவலிங்கம், 78 முயற்சிகளில் 76 புள்ளிகள் பெற்று போட்டியில் அதிக புள்ளிகள் பெற்ற வீராங்கனையாக மாறினார்.
இதேநேரம், சிங்கப்பூர் அணியின் கேய் வேய் டொய் 16 புள்ளிகளுடன் அவரது தரப்பில் அதிக புள்ளிகள் பெற்ற வீராங்கனையாக மாறியிருந்தது குறிப்பிடத் தக்கது.