Breaking News

உயிர்த்த ஞாயிறு தினத்தில் 25 தாக்­கு­தல்­களை நடத்த திட்­டம் - குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு பணிப்­பாளரின் வாக்கு மூலம்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் 25 தாக்­கு­தல்களை நடத்­த திட்டம் வகுக்­கப்­பட்­டது. எனினும் புல­னாய்வு தக­வல்கள் மூல­மாக அவை முறி­ய­டிக்­கப்­பட்­டுள்­ளன. தாஜ் சமுத்­திரா ஹோட்­டலில் குண்­டு­தா­ரி­யொ­ருவர் 2, 3 தட­வைகள் குண்டை வெடிக்க வைப்­ப­தற்­காக முயற்­சிப்­பது தொடர்­பான சீ.சீ.ரீ.வி வீடியோ பதி­வுகள் உள்ளன.

அந்த குண்டு தொழி­ல்நுட்ப கோளாறு கார­ண­மாக வெடிக்­காது போயி­ருக்­க லாம். அதன்­பின்னர் அந்த நபர் தெஹி ­வ­ளையில் ஹோட்டல் அறைக்குள் அந்த கோளாறை பரி­சோ­திக்க முயற்­சித்த போது அது வெடித்­தி­ருக்­கலாம் என குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு பணிப்­பாளர் ஷானி அபே­சே­கர நேற்று பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன் சாட்­சி­ய­ம­ளித்துள்ளாா்.

சம்­பவ தினத்­தன்று தாஜ் சமுத்­திரா ஹோட்­டலில் முக்­கி­யஸ்தர் யாரேனும் இருந்­த­தாக தாங்கள் அறி­ய­வில்­லை­யெ­னவும் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சம்­பவம் தொடர்­பாக ஆராயும் விசேட பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில் நேற்று புதன்­கி­ழமை சாட்­சி­ய­ம­ளிக்கையில் இவ்வாறு தெரி­வித்­துள் ளார்.

அவர் தொடர்ந்து சாட்­சி­ய­ம­ளிக்­கையில்; 2018 டிசம்பர் மாதத்தில் மாவ­னெல்­லையில் புத்தர் சிலைகள் மீது தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டி­ருந்­தன. இது தொடர் ­பாக நாங்கள் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வந்தோம். இச் சம்­பவம் தொடர்­பாக 2 பேர் தொடர்­பான தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

இவர்கள் தொடர்­பாக தேடிச் செல்லும்போது தொலை­பேசி இலக்­கங்­களை அடிப்­ப­டை­யாக கொண்டு தக­வல்­களை பெற்­றுக்­கொள்ளக் கூடி­ய­தாக இருந்­தது. அந்த தொலை­பேசி இலக்­கத்­திற்கு குறுஞ்­செய்தி ஒன்று வந்­தது. 


அது சாஹீட் என்­ப­வரால் அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்­தது. அதன்­படி அவரின் விலா­சத்தை தேடி சென்று அவரை கண்டு பிடிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. இதன்­போது 4 பேரை கைது செய்ய முடி­யு­மாக இருந்­த­துடன் பெரு­ம­ளவு பொருட்­க­ளையும் மீட்டோம்.

105 கிலோ வெடி பொருட்­க­ளையும், வெடிக்க வைக்கும் கரு­விகள் உள்­ளிட்­ட­வையும் மீட்­கப்­பட்­டன. இவர்­க­ளிடம் விசா­ரணை நடத்தும் போது சஹ்ரான் என்­பவர் தொடர்­பு­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது. இந்­நி­லையில் சஹ்­ரானை தேடி பல பிர­தே­சங்­களில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தி­ருந்தோம்.

அத்­துடன் குறித்த பொருட்­களை கொண்டு செல்ல உத­விய வாக­னத்­தையும் மீட்­டெ­டுத்தோம். சஹ்ரான் தொடர்­பாக பல இடங்­க­ளுக்கு சென்று சாட்­சி­யங்­களை பதிவு செய்து வந்தோம்.

நாங்கள் அனே­க­மாக தொலை­பேசி இலக்­கங்­களை அடிப்­ப­டை­யாக கொண்டு விசா­ரணை நடத்­திய போதும் அவர்கள் தீரிமா என்ற செய­லியை பயன்­ப­டுத்­தி­யதால் தக­வல்­களை பெற்­றுக்­கொள்ள முடி­யாது இருந்­தது.

என்­றாலும் இவர்கள் வெளி­நாட்­டுக்கு செல்ல முடி­யாது மாவ­னெல்லை நீதி­மன்­றத்­தினால் தடை­யுத்­த­ர­வையும் பெற்­றுக்­கொண்டோம். கைது செய்­யப்­பட்ட 4 பேரில் இரு­வரை அந்த சம்­ப­வத்­துடன் தொடர்பு இல்­லா­மை­யினால் விடு­விக்க நட­வ­டிக்­கை­யெ­டுத்தோம்.

நன்­றாக தேடிப்­பார்த்தே அவர்­களை விடு­விக்க நட­வ­டிக்­கை­யெ­டுத்தோம். அவர்­க­ளுக்கு விலா­சத்தை மாற்ற முடி­யாது, ஒவ்­வொரு மாதமும் சீ.ஐ.டி.யில் கையெ­ழுத்­திட வேண்டும் என்ற நிபந்­த­னை­க­ளு­ட­னேயே அவர்கள் விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

எவ்­வா­றா­யினும் இவ்­வா­றாக விடு­விக்­கப்­பட்­ட­வர்­களில் இரு­வரே சங்­ரில்லா ஹோட்­டலில் குண்டை வெடிக்க வைத்­த­தாக தெரி­விக்­கின்­றனர். ஆனால் அவர்கள் அல்ல. காரணம் குண்டு வெடிப்பு சம்­ப­வத்தின் பின்னர் சீ.ஐ.டி.யில் கையெ­ழுத்­திட்­டுள்­ளனர்.

கடந்த மாதங்­க­ளிலும் அவர்கள் கையெ­ழுத்­திட்­டுள்­ளனர். இந்த மாத இறு­தி­யிலும் அவர்கள் சீ.ஐ.டி.யில் கையெ­ழுத்­தி­டுவர். அவர்கள் தொடர்­பாக போது­மான சாட்­சிகள் இல்­லா­மை­யினால் நிபந்­த­னை­க­ளு­டன்தான் அவர்கள் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இதே­வேளை குண்டு வெடிப்பு சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய சக­லரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். மேலும் சிலர் உயி­ரி­ழந்­துள்­ளனர். இது தொடர்­பாக 80 வீதம் விசா­ரணை நட­வ­டிக்­கைகள் முடி­வ­டைந்­துள்­ளன. சஹ்­ரானின் குழு வில் பலர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

மற்­றை­ய­வர்கள் எங்­களின் கைதில் இருக்­கின்­றனர். 69 பேர் சீ.ஐ.டியில் கைதா­கி­யி­ருக்­கின்­றனர். பல்­வேறு திட்­டங்­களை அவர்கள் மேற்­கொண்­டி­ருந்­தனர். ஆனால் வனாத்­து­வில்லு சம்­ப­வத்தின் பின்னர் அவர்­களின் திட்­டங்கள் குழம்­பி­யுள்­ளன. இந்த அமைப்பில் சஹ்­ரானின் குழு­வினர் இறந்­தனர்.

இன்னும் சிலர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். வவு­ண­தீவு கொலை சம்­ப­வத்தில் முழு­மை­யாக இது புலி­களின் செயல் என்றே புல­னாய்வு துறை உள்­ளிட்ட சகல துறை­யி­னரும் கூறி­னார்கள். மாவ­ னெல்­லயில் துப்­பாக்­கி­சூடு நடத்­தி­ய­வர்­களும் இவர்கள் என்­பது பின்னர் கண்­ட­றி­யப்­பட்­டது.

வெளி­நாட்டில் இருந்து கைது செய்­யப்­பட்ட நபர்கள் மூல­மாக பல பொருட்கள் கைப்­பற்­றப்­பட்­டன. வெடி­பொருள் உள்­ளிட்ட ஆயு­தங்கள் அதி­க­மா­னவை கண்­ட­றி­யப்­பட்­டன. இது கண்­ட­றி­யாதிருந்தி­ருந்தால் 25 குண்டுகள் வெடித்­தி­ருக் கும் இர­சா­யான பகுப்­பாய்வு மூலம் அமோ­னியம் நைற்­றேற்று என்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

யூரி­யா­வுடன் நைற்றேற் கலக்­கப்­பட்­டுள்­ளது. அது இங்­கேயே செய்­யப்­பட்­டுள்­ளது. வெளி­நாட்­டி­லி­ருந்து கொண்டு வரப்­பட்­டவை அல்ல. நாங்கள் தாஜ் சமுத்­திரா ஹோட்­டலில் சீ.சீ.ரீ.வி. படங்­களை பார்த்தோம். அதில் குறித்த நபர் இரண்டு மூன்று தட­வைகள் முயற்­சித்துள்ளாா்.

பின்னர் வெடிக்­க­வில்லை. பின்னர் அந்த குண்­டுடன் பள்­ளிக்கு செல்­கின்றார். பின்­னரே தெஹி­வளை பகு­தியில் அது வெடிக்­கின்­றது. எவ்­வா­றா­யினும் தாஜ் சமுத்­திரா ஹோட்­டலில் அது வெடிக்­காது போன­மைக்கு கார­ணங்கள் இருக்­கலாம்.

அதா­வது தொழில்­நுட்ப ரீதியில் பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டி­ருந்­த­மை­யினால் அது வெடிக்­காது போயி­ருக்­கலாம். பின்னர் அவர் தெஹி­வ­ளையில் ஹோட்டல் அறையில் அந்த கோளாறு தொடர்­பாக ஆராயப் போகும் போதே அது வெடித் துள்ளது.

ஆனால் கூறப்படுவதை போன்று தாஜ்சமுத்திரா ஹோட்டலில் விசேட பிரபு இருந்ததாக தெரியாது. உண்மையில் என்ன நடந்தது என்பதனை ஆராய வேறு வழியில்லை. ஆனால் அவர் வெடிக்க வைக்க முயற்சித்தமை வீடியோவில் உறுதியாகியுள்ளது.

இந்த விடயத்தில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பாக எங்கள் மீது சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். எங்களுக்கு மருத்துவ விடயங்கள் தொடர்பாக தெரியாது. எவ்வாறாயினும் 143 முறைப்பாடுகளே பிள்ளைகள் இல்லையென தெரிவித்துள்ளன.

ஆனபோதும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆராயாது எங்களால் ஒன்றும் செய்ய முடியாதெனத் தெரிவித்துள்ளாா்.