Breaking News

பதில் செய­லா­ள­ருக்கு எதி­ராக தெரி­வுக்­குழு அமைக்க வேண்டும்: ஆளும், எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள்

ஐக்­கிய நாடு­களின் விசேட தூது­வரை சந்­தித்து நீதி­மன்றில் இடம்­பெற்­று­வரும் வழக்கு விசா­ரணை தொடர்­பாக விளக்­க­ம­ளிக்­கு­மாறு தெரி­வித்து வெளி­வி­வ­கார அமைச்சின் மேல­திக பதில் செய­லா­ள­ரினால் சட்­டமா அதிபர், கொழும்பு மேல்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் மற்றும் நீதி அமைச்­சுக்கு அனுப்­பப்­பட்ட கடித விட யத்தில்

பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு அமைத்து விசா­ரணை நடத்­த­வேண்டுமென ஆளும், எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் நேற்று கூட்­டாக சபா­நா­ய­கரை கேட்­டுக்­கொண்­டனர்.

பாரா­ளு­மன்றம் நேற்று புதன் கிழமை சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் கூடி­யபோது சபா­நா­ய­கரின் அறி­விப் பில்...,

நேற்று (நேற்று முன்­தினம்) ஐக்­கிய நாடு­களின் விசேட தூதுவர் கிரமட் நய­னல்­வோ­சியை சந்­திக்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வெளி­வி­வ­கார அமைச்சின் மேல­திக பதில் செய­லாளர் அஹமத் ஏ. ஜாவி­தினால் கடிதம் அனுப்­பப்­பட்­டுள்­ளமை தொடர்பில் எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ், தினேஷ் குண­வர்த்­தன மற்றும் சிலர் தெரி­வித்த விடயம் தொடர்­பாக நான் தேடிப்­பார்த்­த­போது,

அந்த விடயம் உண்மை என்­பது தெரி­ய­வந்­தது. அத­னைத்­தொ­டர்ந்து வெளி­வி­வ­கார அமைச்சின் செய­லாளர் மற்றும் நீதி­மற்றும் சிறைச்­சா­லைகள் அமைச்­சரை அறி­வு­றுத்தி இச் சந்­திப்பு இடம்­பெ­றாமல் அதனை தடுக்க நட­வ­டிக்கை எடுத்தேன்.

நீதி­மன்ற சுயா­தீ­னத்­தன்­மையை பாது­காக்­கும்­ வ­கையில் எதிர்­கா­லத்­திலும் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெ­றாமல் பாதுக்க நட­வ­டிக்கை எடுப்போம். அத்­துடன் வெளி­வி­வ­கார அமைச்சின் செய­லாளர் என்னை சந்­தித்து இது­ தொ­டர்­பாக தெரி­வித்துள்ளாா்.

அதேபோல் பிர­தம நீதி­ய­ர­சர்கள் வெளி­நாட்டு தூது­வர்­க­ளுடன் சிநே­க­பூர்வ சந்­திப்­புக்­களை மேற்­கொள்­வது கடந்த காலங்­க­ளிலும் இடம்­பெற்­றி­ருக்­கின்­றது. இது­தொ­டர்­பாக நீதி அமைச்சர், நீதி அமைச்சின் செய­லாளர் மற்றும் வெளி­வி­வ­கார அமைச்சின் செய­லாளர் ஆகியோர் இன்று (நேற்று) என்னை சந்­தித்து தெளி­வு­ப­டுத்­தினர்.

இது­போன்ற சம்­ப­வங்கள் எதிர்­கா­லத்தில் இடம்­பெ­றாமல் பாது­காத்­துக்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அவர்­க­ளுக்கு அறி­வு­றுத்­தினேன் என்றார். அத­னைத்­தொ­டர்ந்து எழுந்த எதிர்க்­கட்சி உறுப்­பினர் தினேஷ் குண­வர்த்­தன, நீதி­மன்ற சுயா­தீ­னத்தை பாது­காக்க உட­னடி நட­வ­டிக்கை எடுத்­த­மைக்கு நாங்கள் நன்றி தெரி­விக்­கின்றோம்.

என்­றாலும் வெளி­வி­வ­கார அமைச்சின் செய­லா­ள­ரினால் அனுப்­பப்­பட்ட கடி தம் பார­தூ­ர­மா­னது என்­ப­த­னால்தான் உட­ன­டி­யாக செயற்­பட்டு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

நீதித்­து­றையின் சுயா­தீ­னத்­துக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தும்­ வ­கையில் செயற்­பட்­டுள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சின் செய­லாளர் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின் றார்.

அவரின் இந்த தவ­றுக்கு மன்­னிப்பு வழங்கி இதனை முடித்­து­வி­ட­மு­டி­யாது. அதனால் அவ­ருக்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் பிரே­ரணை ஒன்று கொண்­டு­வந்து விசா­ரணை நடத்த அனு­மதி வழங்­க­வேண்டும்.

அல்­லது தவறு செய்த செய­லா­ளரை வேறு திணைக்­களம் ஒன்­றுக்கு இடம் மாற்ற நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்றார். இதன்­போது எழுந்த அமைச்சர் அஜித் பி பெரேரா தெரி­விக்­கையில், இடம்­பெற்ற சம்­பவம் தொடர்பில் உட­ன­டி­யாக தலை­யிட்டு தீர்த்­து­வைத்­த­மைக்கு நாங்கள் நன்றி தெரி­விக்­கின்றோம்.

கடந்த காலங்­களில் பாரா­ளு­மன்­றத்­துக்கு தலைமை வகித்­த­வர்கள் ரப்பர் சீலுக்கு மாத்­தி­ரமே செயற்­பட்டு வந்­துள்­ளனர். அத்­துடன் விசா­ரிக்­கப்­பட்­டு­வரும் வழக்கு நட­வ­டிக்­கைகள் தொடர்பில் இவ்­வா­றான கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்­வதை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

இது உயர் அதி­கா­ரிகள் தான்­தோன்­றித்­த­ன­மாக எடுக்கும் தீர்­மா­னங்­க­ளாகும். இது அரச கொள்­கை­யல்ல. அதனால் எதிர்­கா­லத்­திலும் இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­றாமல் தடுக்க நீண்­ட­கால நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என் றார்.

அத­னைத்­தொ­டர்ந்து வாசு­தேவ நாண­யக்­கார தெரி­விக்­கையில்,

எமது நாட்டின் நீதி­மன்ற சுயா­தீ­னத்­தன்­மையை பாது­காக்கும் தேவையை ஐக்­கிய நாடுகள் சபைக்கும் தெரி­விக்­க­வேண்டும். அதே­போன்று எமது நீதி­ப­திகள் குழு­வொன்று அமெ­ரிக்­கா­வுக்கு பயிற்­சிக்­காக அனுப்­பப்­பட்­டி­ருந்­தனர்.

அங்கும் எமது விசேட நீதி­மன்றம் தொடர்­பா­கவும் அங்கு விசா­ரணை மேற்­கொள்ளும் நீதி­ப­திகள் தொடர்­பா­கவும் கேட்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக அங்­கு­சென்ற நீதி­பதி ஒருவர் ஊடாக எமக்கு அறி­யக்­கி­டைத்­தது.

அந்த நீதி­பதி அந்த விட­யங்­களை பதி­வு­செய்து வந்­தி­ருக்­கின்றார் என்றார். அதன்­போது எழுந்த எதிர்க்­கட்­சி­களின் பிர­தம கொற­டா­வான மஹிந்த அம­ர­வீர தெரி­விக்­கையில், இந்த விட­யத்தை சாதா­ரண விட­ய­மாக கரு­த­மு­டி­யாது.

சுயா­தீன நீதி­மன்­ற­மொன்றை நடத்­திச்­செல்­லு­மாறு தெரி­விப்­பதும் இவர்­க­ளாகும். அத்­துடன் வெளி­வி­வ­கார அமைச்சின் மேல­திக செய­லா­ள­ருக்கு இவ்­வாறு அறி­விப்­பொன்றை செய்­வ­தற்கு யார் அதி­காரம் வழங்­கி­யது என்­பதை தேடிப்­பார்க்­க­வேண்டும்.

அதற்­காக பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழு­வொன்றை அமைத்து இது ­தொ­டர்­பாக விசா­ரணை மேற்­கொள்­ள­வேண்டும் என்றார். இத­னைத்­தொ­டர்ந்து நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­விக்­கையில், நீதி­ப­திகள் குழு­வொன்று அமெ­ரிக்­கா­வுக்கு சென்­ற­வேளை அங்கு இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலின் குரல் பதி­வொன்று தன்­னிடம் இருப்­ப­தாக வாசு­தேவ நாண­யக்­கார தெரி­விக்­கிறார்.

இதற்கு முன்­னரும் இந்த விட­யத்தை சபையில் தெரி­வித்­தி­ருந்தார். அப்­போதும் நாங்கள் இந்த குரல் பதிவு மற்றும் ஏனைய தக­வல்கள் இருந்தால் அதனை தாருங்கள் நட­வ­டிக்கை எடுப்போம் என தெரி­வித்­தி­ருந்தோம்.

அதனால் தற்­போதும் தெரி­வித்­துக்­கொள்­வது, தக­வல்கள் இருந்தால் தாருங்கள் அது­தொ­டர்பில் விசா­ரணை மேற்­கொண்டு இந்­த­ச­பைக்கு அறிக்கை சமர்ப்­பிப்போம் என்றார்.

அமைச்சர் சுஜீவ சேன­சிங்க தெரி­விக்­கையில், 

வெளி­வி­கார அமைச்சின் மேல­திக செய­லா­ளரின் நட­வ­டிக்­கையை நாங்கள் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள மாட்டோம். அதனால் இது­தொ­டர்­பாக கட்சி பேத­மின்றி விசா­ரணை நடத்­த­வேண்டும்.

அதற்கு நாங்கள் ஆத­ரவு வழங்­குவோம் என்றார். இறு­தி­யாக இதற்கு சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய பதி­ல­ளிக்­கையில்,

இந்த விட­யத்தை வெளிக்­கொண்­டு­வந்த எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ், தினேஷ் குண­வர்த்த மற்றும் ஏனை­ய­வர்­க­ளுக்கும் நன்­றி­களை தெரி­விக்­கின்­றேன்.

 அத்­துடன் இது­தொ­டர்­பாக வெளி­வி­வ­கார அமைச்சின் செய­லாளர் மற்றும் நீதி அமைச்சின் செயலாளருக்கு தெரிவித்த ஆலோசனையின் பிரகாரம் எந்த நீதிபதியும் ஐக்கிய நாடுகளின் விசேட தூதுவரை சந்திக்கவில்லை என்பதை பொறுப்புடன் தெரிவிக்கின்றேன்.

அத்துடன் இதுதொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து விசாரணை நடத்துவது தொடர்பாக கட்சி தலைவர் கூட்டத்தின்போது தீர்மானித்துக் கொள்ளலாம் என்றார்.

 இதன்போது எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் எழுந்து பிரதம நீதியரசர் சந்தித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அது உண்மையா என கேட்டதற்கு, சபாநாயகர், ஆம், பிரதம நீதியரசரை சந்தித்திருக்கின்றார் என நான் அறிவித் தேன்.

அவ்வாறான சந்திப்பு இதற்கு முன்னரும் இடம்பெற்றதன் பிரகாரமே இச் சந்திப்பும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.