Breaking News

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலைக்கப்பட வேண்டும் - சுரேஷ்

இந்த நாடு ஒற்றையாட்சி எனவும் பௌத்த சிங்கள நாடு என சம்மந்தன் ஐயா ஏற்றுக்கொண்டிருக்கின்றார்.

விடுதலைப்புலிகளால் நல்ல நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேறுபாதையில் செல்கின்றது எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலைக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் கட்சியின் இணைப்பாளருமான தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டகளப்பு மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சுரேசின் இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கிழக்குக்கென நியமிக்கப்பட்டுள்ள செயலணி தன்னுடைய வேலையை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதியிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது இந்த செயலணி நியமிக்கப்படதன் பின்னர் சிங்கள பேரினவாத சக்திகள் பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.அந்த வகையில் ஞானசார தேரர் இனவாத கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்.

200 வருட பின்னரே இங்கு பௌத்தம் பற்றிய செயற்பாடு இருந்ததே தவிர, விஜயன் வருகைக்கு முன்னரே இலங்கை தீவிலே சிங்களவர்கள் பூர்வீக குடிகள் என்பதற்கான ஆதாரங்களை ஞானசார தேரர் நிருபிக்க வேண்டும் என சவாலாக விடுகின்றேன் ? என கேள்வி எழுப்பியதுடன்.

இவர்களுடைய எந்த கொள்கையும் தமிழ் மக்களின் நிலத்தை காப்பாற்றாது ஒற்றுமை உரிமை என்கின்றனர் ஆனால் கிழக்கில் ஒற்றுமையை ஏற்படுத்தவில்லை கிழக்கை மீட்பதாக பலர் புறப்பட்டனர் ஆனால் இன்று மாற்று சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது எனவே மக்கள் தெளிவாக இருக்கவ்ண்டும் என கூறியுள்ளார்.