Breaking News

பிடியாணை இன்றி கைது செய்யப்படும் - தேர்தல் ஆணையாளர்!

பொதுத்தேர்தலுடன் தொடர்புடைய சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் எண்களைக் காட்சிப்படுத்தல் போன்றவற்றுக்கு பிடியாணை இல்லாமல் கைது செய்ய முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தேர்தல் சட்டத்திற்கு அமைய கட்சி அலுவலகத்தில் கட்சி மற்றும் சின்னம் காட்சி படுத்த மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் வேட்பாளரின் படம் மற்றும் எண்ணைக் காட்ட அனுமதிக்கப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

கட்சி அலுவலகங்களில் கட்டவுட் காட்சிப்படுத்தலுக்கு இடமளிக்காதது தேர்தல் ஆணைக்குழுவின் நீண்டகால பிரச்சினை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இருப்பினும், தேர்தல் சட்டம் மீறப்பட்டால், பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்வார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

தேர்தல் மோதல்களைத் தீர்ப்பது மற்றும் வாக்குச் சட்டங்களை அமல்படுத்துவது பற்றிய கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல் ஆணையாளர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

பொதுத் தேர்தலுக்கான ஒத்திகை வாக்கெடுப்புக்கள் பல பிரதேசங்களில் நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு வாக்களிப்புக்கான நேரத்தை மாலை 5.00 மணி வரை நீட்டிக்க தேர்தல் ஆணையம் முடிவெடுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.