தேர்தல் யாப்பில் இருக்கும் சட்டத்தை தான் செயற்படுத்தினேன் - தேர்தல் ஆணையாளர் - THAMILKINGDOM தேர்தல் யாப்பில் இருக்கும் சட்டத்தை தான் செயற்படுத்தினேன் - தேர்தல் ஆணையாளர் - THAMILKINGDOM
 • Latest News

  தேர்தல் யாப்பில் இருக்கும் சட்டத்தை தான் செயற்படுத்தினேன் - தேர்தல் ஆணையாளர்

  இம்முறை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது விருப்பு இலக்கத்தை காட்சிப்படுத்துவதற்கு உள்ள சந்தர்ப்பம் குறைவது தொடர்பாக வேட்பாளர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தாலும் தேர்தல் ஆணைக்குழுவினால் புதியசட்டம் அமுல்படுத்த படவில்லை எனவும் தேர்தல் யாப்பில் இருக்கும் சட்டமே செயற்படுத்தப்படுவதாகவும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

  இதற்கமைய இதுவரை மேற்கொள்ளப்பட்ட தவறுகள் சரிசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

  அதேபோல் வேட்பாளர்கள் பொதுமக்கள் மத்தியில் நன்கு பிரபலம் என்றால், அவர்கள் மக்களுக்காக வேலை செய்தால் அவர்களுக்கு அஞ்சுவதற்கு எந்த காரணமும் இல்லை எனவும் குறிப்பிட்ட அவர் பிரபலமற்ற வேட்பாளர்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படும் ஆனால் அவர்கள் மூன்று உறுப்பினர்களைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் சென்று சிறிய கூட்டங்களை நடத்தலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

  ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அனைத்து வேட்பாளர்களின் விருப்பு எண்களை தேர்தல் ஆணைக்குழுவினால் ஒவ்வொரு வீட்டிற்கும் விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: தேர்தல் யாப்பில் இருக்கும் சட்டத்தை தான் செயற்படுத்தினேன் - தேர்தல் ஆணையாளர் Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
  Scroll to Top