பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாத தாக்குதல் - 4 பேர் பலி
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் துப்பாகிதாரிகள் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
பங்குச்சந்தை அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயிலில் கையெறி குண்டை வீசிவிட்டு, கட்டடத்துக்குள் அவர்கள் நுழைந்துள்ளார்.
மூன்று துப்பாகிதாரிகள் கொல்லப்பட்டதாகவும், தங்களின் பதில் தாக்குதல் நடந்துவருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளது என ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது
ஆனால், மொத்தம் எத்தனை துப்பாக்கிதாரிகள் கட்டடத்துக்குள் நுழைந்துள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அலுவலகத்துக்குள் நுழைந்த மூன்று துப்பாக்கிதாரிகளும் கொல்லப்பட்டதாகவும், தற்போது மீட்பு நடவடிக்கை நடந்து வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
´´பங்குச்சந்தை அலுவகத்தின் வர்த்தக அறைக்கு வந்து, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இறந்தவர்களில் ஒருவர் அலுவகத்தில் பாதுகாவலர்´´ என பாகிஸ்தான் பங்குச்சந்தையின் இயக்குநர் அடிப் அல் ஹபிப் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.