சஜித்தின் தந்தையே புலிகளுக்கு ஆயுதம் வழங்கினார் - பிரதமர் மஹிந்த
சஜித் பிரேமதாஸவின் தந்தைதான் கருணாவுக்கும், புலிகளுக்கும் ஆயுதம் வழங்கியதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டி பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தனது கருத்து தவறாக அறிக்கையிடப்பட்டுள்ளதாக கருணா அம்மான் கூறியதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமக்கு ஆயுதம் வழங்கியவர் யார் என கருணா கூறவில்லை.
சஜித் பிரேமதாஸவின் தந்தைதான் கருணாவுக்கும், புலிகளுக்கும் ஆயுதம் வழங்கியதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிங்கள மக்களை கொல்வதற்கும், இராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவும் ஆயுதம் வழங்கப்பட்டது.
அவ்வாறானரின் பிள்ளைதான் தற்போது கருணா அம்மான் என்று பொய்யான முறையில் கோஷமிடுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.