Breaking News

மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ள கொரோனா - 10 குடும்பங்கள் தனிமைப்படுத்தல்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டதன் பின் மாரவில பிரதேசத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் பணிபுரிந்த பெண்ணுக்கே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவருடன் தொடர்பு பேணிய அனைவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

இவர்கள் அனைவருக்கும் PCR பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கந்தக்காடு மத்திய நிலையத்தில் பணிபுரிந்த 8 பேர் விடுமுறையில் வீடு சென்றுள்ளதாகவும் அவர்களை உடனடியாக மத்திய நிலையத்திற்கு திரும்புமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, புனர்வாழ்வு முகாமில் இருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை. அது தொடர்பான விசாரணை இடம்பெறுவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார். 

இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2154ஆக உயர்வடைந்துள்ளது.