சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை தட்டிச்சென்ற டி காக்!
தென்ஆப்பிரிக்காவின் சிறந்த வீரர் விருதை அந்த அணியின் கேப்டன் குயின்டன் டிகாக் பெற்றுள்ளார்.
தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணியில் சாதனை படைக்கும் சிறந்த வீரர், வீராங்கனைகளை கௌரவிக்க விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை கேப்டன் குயின் டி காக் தட்டிச்சென்றுள்ளார். அத்துடன் சிறந்த டெஸ்ட் வீரராகவும் குயின்டன் டி காக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அசத்தி வரும் டி காக் சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை நிகழ்த்தினார். இதனால் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த வீரர் விருதை வெல்லும் ஆறாவது வீரர் குயின்டன் டி காக் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2004-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருது இதற்கு முன் நிட்னி, ரபடா, டி வில்லியர்ஸ், காலிஸ், ஆம்லா ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த ஒருநாள் மற்றும் டி 20 கிரிக்கெட் வீரராக வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த வீராங்கனை விருதை 21 வயதான லாரா வால்வார்ட் தட்டிச்சென்றார்.