மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
கோவிட் - 19 வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமைகள் காரணமாக ஒரு சில வரையறைகளுக்கு உட்பட்டு செயற்பட்டு வந்த திணைக்கள செயற்பாடுகளை நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு ஜூலை 1 ஆம் திகதி முதல் வழமையான விதத்தில் பேணிச் செல்ல தீர்மானிக்க பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 
மேலும், இதன் அடிப்படையில் எதிர்வரும் காலங்களில் தொலைபேசி ஊடாக நேரகாலத்துடன் திகதிகளை ஒதுக்கிக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் சீ. அலஹகோன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அலுவலக வளாகத்திற்குள் வருகின்ற சேவை பெறுநர்கள் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய முகக் கவசங்களை அணிதல், கிருமித்தொற்று நீக்கம் மற்றும் சமூக இடைவெளிகளைப் பேணுதல் உட்பட அனைத்து சுகாதார ஆலோசனைகளையும் பின்பற்றுதல் வேண்டும் எனவும் மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதன் காரணமாக ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும் மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் சீ. அலஹகோன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 

 
 
 
 
 
 











