ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பகிர்வு - யாழில் சஜித் உறுதி
ஒருமித்த நாட்டிற்குள் 13 ஆவது அரசியலமைப்பையும் தாண்டி அதிகாரப்பகிர்வை வழங்குவேன் என சஜித் பிரேமதாச யாழில் உறுதியளித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (02.07.2020) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
நுண் கடனினால் பாதிக்கப்பட்டுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சிறப்பு திட்டமொன்றை அறிமுகம் செய்து அதனூடாக நிவாரணங்கள் வழங்க தீர்மானித்துள்ளேன்.
அதே போன்று வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளேன்.
கிராமிய மற்றும் நகர நிர்வாக கட்டமைப்பை உருவாக்கி தனது பிரதேச அபிவிருத்திகளை அந்த மக்களே தீர்மானிக்க கூடிய வகையில் திட்டத்தை உருவாக்குவேன்.
அனைத்து சந்தர்ப்பங்களிலும் 13 ஆம் அரசியலமைப்பை பாதுகாத்து செயற்படுவேன். ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பகிர்வை மையப்படுத்திய மாகாண சபையும் என்னால் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.