ராஜீவ் கொலை வழக்கு: நளினி தற்கொலை முயற்சி!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஏழு தமிழர்கள் 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஏழு பேரில் நளினி வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அங்கு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நளினிக்கும் சக கைதிகளுக்கும் சண்டை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் நளினி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நளினி துணியைக் கொண்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார்.
சிறைக் காவலர்கள் அதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
முன்னதாக நளினி தன்னை வேலூர் பெண்கள் தனிச் சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றக் கோரியிருந்தார். ஆனால் சிறை நிர்வாகம் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. நளினியின் வழக்கறிஞர் புகழேந்தியும் இதை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நளினிக்கு வேலூர் பெண்கள் தனிச் சிறையில் பாதுகாப்பு இல்லை என்பது இந்த சம்பவத்தின் மூலம் உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.