2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று! - THAMILKINGDOM 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று! - THAMILKINGDOM
 • Latest News

  2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று!

  இந்தியாவில் 2023-ம் ஆண்டு நடக்க உள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைப் போட்டித்தொடரில், சூப்பர் லீக்கில் பங்கேற்கும் அணிகளுக்கான தகுதிச் சுற்றை ஐசிசி அறிவித்துள்ளது.

  10 அணிகள் பங்குபெறும் லீக் சுற்றில், ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்துள்ள அணிகள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், ஓமன், அயர்லாந்து ஆகியவற்றுடன், 2015-17 உலகக் கிரிக்கெட் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்ற நெதர்லாந்தும் தகுதிச் சுற்றில் பங்கேற்கிறது.

  குறிப்பிட்ட 5 அணிகளுக்கு இடையே நடைபெறும் தொடர்கள் மற்றும் அந்த அணிகள் மற்ற சர்வதேச அணிகளுடன் மோதும் தொடரின் முடிவுகளை கொண்டு, புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு அணிகள் சூப்பர் லீக்கிற்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று! Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
  Scroll to Top