வனிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! - THAMILKINGDOM வனிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! - THAMILKINGDOM
 • Latest News

  வனிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன்!

  நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை சென்ற மாதம் மூன்றாவது திருமணம் நடைபெற்ற நிலையில் அதற்கு பிறகு பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டது. பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவர் அளித்த போலீஸ் புகாரில் தன்னை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை சட்ட விரோதமாக வனிதாவை திருமணம் செய்திருக்கிறார் பீட்டர் பால் என அந்த புகாரில் கூறி இருந்தார். 

  இது தொடர்பாக நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அந்த பெண்ணுக்கு ஆதரவாக ட்விட்டரில் பேச, வனிதா அவருக்கு கோபத்துடன் பதில் அளித்திருந்தார். இது உங்க ஷோ இல்லை என அவரை விமர்சித்தார் வனிதா. இப்படி வனிதா - லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இடையே துவங்கிய பிரச்சனை கடந்த பல வாரங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. 

  மேலும் ஒரு யூடியூப் சேனலில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பேசிக்கொண்டிருந்த போது, வனிதா எல்லைமீறி பேசியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பாக வனிதாவுக்கு நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதை ஒரு அறிக்கையின் மூலமாக லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அனைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளார். 

  அந்த அறிக்கையில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கூறி இருப்பதாவது.. 

  ஒரு youtube Channel ஏற்பாடு செய்திருந்த Skype நேர்காணலின்‌ போது, வனிதா விஜயகுமார்‌ என்னையும்‌ எனது கணவரையும்‌ அநாகரிக வார்த்தைகளால்‌ தாக்கி பேசியிருந்தார்‌. என்னுடன்‌ பேச வேண்டும்‌ என்று வனிதா விஜயகுமார்‌ தான்‌ அந்த சேனலை தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்யும்படி கேட்டிருக்கிறார்‌. ஆனால்‌ நேர்காணலில்‌ வேண்டுமென்றே தவறாக பேசினார்‌.   பின்னர்‌ அது ஒளிபரப்பும்‌ செய்யப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து, நானும்‌ எனது கணவரும்‌ எங்களது வழக்கறிஞர்‌ மூலமாக வனிதா விஜயகுமாருக்கு, குற்றவியல்‌ (Criminal) மற்றும்‌ உரிமையியல்‌ (Civil) சட்டத்தின்‌ கீழ்‌ நோட்டீஸ்‌ அனுப்பியுள்ளோம்‌. அதன்படி, Inspector, All Women's Police Station, Vadapalani & SRMC station, Deputy Commissioner of Police, Vadapalani, Asst Commissioner மற்றும்‌ தமிழ்நாடு மாநில பெண்கள்‌ ஆணையம்‌ (Mahila Ayog) ஆகியோருக்கும்‌ நோட்டீசின்‌ நகல்‌ அனுப்பப்பட்டுள்ளது. 

  என லட்சுமி ராமகிருஷ்ணன் கூறி உள்ளார். 

  இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ட்விட்டர் தளத்தில் இருந்து வெளியேறி இருந்த வனிதா விஜயகுமார் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ட்விட்டருக்கு திரும்பி உள்ளார். கடந்த சனிக்கிழமை பீட்டர் பாலின் பிறந்தநாள் என்பதால் வனிதா மற்றும் மகள்கள் அனைவரும் சேர்ந்து காரில் பிக்னிக் சென்றிருக்கிறார்கள். அவர்கள் காரிலேயே பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடி சாப்பிட்டு கொண்டிருக்கும் வீடியோக்களை வனிதா ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: வனிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
  Scroll to Top