Breaking News

இலங்கையர்கள் உட்பட மலேசியாவில் 25,000 பேர் கைது! 21,000 பேர் நாடுகடத்தல்!


மலேசியாவிலிருந்து கடந்த 8 மாதங்களில் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 25,434 கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இலங்கையர்களும் உட்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 11 வரை எடுக்கப்பட்ட 4,764 நடவடிக்கைகளின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய குடியேற்றத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே சமயம், இந்நடவடிக்கைகளில் சட்டவிரோத குடியேறிகளுக்கு வேலைகளுக்கு அமர்த்திய 269 முதலாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என மலேசிய உள்துறை அமைச்சர் Hamzah Zainudin தெரிவித்துள்ளார். இந்த முதலாளிகளில் மலேசியர்கள் மட்டுமின்றி இந்தோனேசியர்கள், தாய்லாந்தினர், வங்கதேசிகள், பாகிஸ்தானியர் மற்றும் இன்னும் சில நாட்டவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.