Breaking News

பருத்தித்துறை பகுதியில் 275 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

பருத்தித்துறை கடற்பரப்பில் மிதந்து வந்த நிலையில் 275 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை யினர் தெரிவித்தனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது மர்மமான பொதிகள் கடலில் மிதந்து வந்ததை கடற்படையினர் அவதானித்துள்ளனர்.

இதன்போது குறித்த பொதிகளை கடற்படையினர் சோதனையிட்ட போது அதற்குள் கஞ்சா போதைபொருள் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சா போதைப் பொருட்கள் 275 கிலோ எடை உடையவை என கடற்படையினர் தெரிவித்தனர்.
 
மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் அனைத்தும் பருத்தித்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.