உலகளவில் கொரோனா பாதிப்பு - முழு விபரம்!
இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: இதுவரை உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 21,604,168 என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று, தற்போது உலகின் 213 நாடுகள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களில் பரவியுள்ளது.
இன்று (16) காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 768,739 ஆக இருந்தது.
உலகிலேயே கொரோனா நோய்த்தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்காவில், கொரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 172,606 ஆக உள்ளது.
அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இன்று காலை நிலவரப்படி, அந்த நாட்டில் 5,529,789 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 2,900,188 போ் அந்த நோயிலிருந்து குணமடைந்ததாக அதிகாரிகள் அறிவித்துள்ளனா். 2,456,995 போ் தொடா்ந்து தனிமைப்படுத்தப்பட்டும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வருகின்றனா்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் பிரேஸில் உள்ளது. அந்த நாட்டில் 3,317,832 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. 107,297 போ் அந்த நோய் பாதிப்பு காரணமாக பலியாகினா். 2,404,272 போ் அந்த நோயில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 806,263 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 8,318 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கொரோனா பலி எண்ணிக்கையில், அமெரிக்கா, பிரேஸில் தவிர பிரிட்டன், மெக்ஸிகோ, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளும் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.








