Breaking News

இணைந்த வடக்கு-கிழக்கில் சுய நிர்ணய அடிப்படையிலான சமஷ்டி - சி.வி.விக்னேஸ்வரன்

இணைந்த வடக்கு - கிழக்கில் சுய நிர்ணய அடிப்படையிலான சமஷ்டித் தீர்வு வழங்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

இல்லாவிட்டால், இறுதித் தீர்வு தொடர்பில் சர்வதேச மேற்பார்வையின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பும் அதன் அடிப்படையில் செயற்பாட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டால் எந்தக் கட்சியுடனும் ஒத்துழைத்து செயற்படுவதற்கு தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

வாராந்த கேள்விகளுக்கு வழங்கிய பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமது இனத்தின் நன்மை கருதி, தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே பேரினவாதத்தை எதிர்கொள்வதற்கு கொள்கை அடிப்படையில் ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மிகவும் அவசியமாக இருக்கின்றன. 

இதற்கு ஒத்துழைப்பு வழங்க தானும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் தயாராக உள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.