Breaking News

நேற்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்!

நேற்றைய தினம் இந்நாட்டில் புதிதாக 4 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2886 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் மூன்று பேர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்துள்ள நிலையில் மற்றைய தொற்றாளர் ஜப்பானில் இருந்து வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த மூன்று பேரும் முழங்காவில் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என தெரிவிக்கப்படும் நிலையில், மற்றைய தொற்றாளர் ராஜகிரிய ஆயுர்வேத தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல், இதுவரையில் 2658 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தொடர்ந்தும் 217 பேர் வைத்தியசாலைகளில் சிகச்சை பெற்று வருவதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு குறிப்பிட்டுள்ளது.