Breaking News

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!

 தேர்தலில் வெற்றிப் பெற்ற அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் விபரங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தேர்தலில் வெற்றிப் பெற்ற பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய நிலையில் அவர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையை கையளித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும், இதுவரையில் குறித்த தகவல்களை பெற்றுத்தராத பாராளுமன்ற உறுப்பினர்கள் அவற்றை விரைவில் பெற்றுத்தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.