நாடாளுமன்றம் கூடவுள்ள திகதி வெளியீடு - வர்த்தமானி
புதிய நாடாளுமன்;றம் எதிர்வரும் 20ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்குக் கூடும் என அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 70வது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற அமர்வில் முதலில் சபாநாயகர் பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதிதித் தவிசாளர் ஆகியோர் தெரிவுசெய்யப்படுவர் என அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி பிரமாணம் செய்து கொள்வார்கள் என அந்த அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புதிய சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்த்தனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதி சாபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டியவபின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.








