Breaking News

முன்னணியினர் முள்ளிவாய்க்காலில் உறுதியுரை!


பாராளுமன்ற பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்தலைவருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தினர். 

2009 ஆம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று அளிக்கப்பட்டதன் நினைவாக முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூபியில் அகவணக்கம் செலுத்தி சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

சற்று முன்னர் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கட்சியினுடைய ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.