அம்பலமாகியது மணிவண்ணனின் இரகசியப் பேச்சுவார்த்தை! - THAMILKINGDOM அம்பலமாகியது மணிவண்ணனின் இரகசியப் பேச்சுவார்த்தை! - THAMILKINGDOM

 • Latest News

  அம்பலமாகியது மணிவண்ணனின் இரகசியப் பேச்சுவார்த்தை!


  பதவி நீக்கம் செய்யப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி மணிவன்னண் திருகோமலையில் தோ்தலுக்கு முன்னா் மற்றும் தோ்தலுக்கு பின்னரான சில கட்ட இரகசியச் சந்திப்புக்களை நடாத்தியிருப்பது தெரியவந்துள்ளது. 

  அச் சந்திப்புக்களில் மிக முக்கியமான சந்திப்பாக திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தா்கள் சிலரை சந்தித்துத் தனது அரசியல் இணைவு சம்பந்தமாகக் கலந்துரையாடியிருப்பது தெரியவந்துள்ளது. 

  இச்சந்திப்புக்கள் கடற்கரையோர விடுதியொன்றில் நடைபெற்றுய்யதாக தெரியவருகின்றது. மணிவன்னனுடன் வீரா, லகிந்தன் மற்றும் துசாந்தன் ஆகியோா் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான திருமலை துசாந்தன் (சம்பந்தரின் மிக நெருங்கிய முக்கியஸ்தா்), திருமலை பிரணவன், செந்தூரன் ரிசிஓ, கனா துசியந்தன், சக்தீபன், குருநாதன் பிரதீபன், தியாகராசா பிரபாதரன், தனியார் காப்புறுதிக்கம்பனியொன்றிற் பணியாற்றும் கௌதமன் உட்பட சிலரும் கலந்துகொண்டுள்ளனர்.

  இச்சந்திப்பில் ஈடுபட்ட ஒருவரே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளா் லக்ஸ்மனை விலை கொடுத்து வாங்கிய நடவடிக்கையில் ஈடுபட்டவா் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை வைத்தியா் ஒருவரின் வதிவிடத்தில் நடைபெற்றதொரு கூட்டத்தில் தென்கைலை ஆதீனம், சட்டத்தரணி புலேந்திரன் டொக்டர் சிவா போன்றவர்கள் மணிவன்னனுடன் கலந்துரையாடி கட்சியில் இணைவது தொடர்பாக பேசியிருக்கின்றனர். 

  சட்டத்தரணி புலேந்திரன் மற்றும் டொக்டர் சிவா போன்றவர்கள் கடந்த பொதுத் தேர்தலில் தெருத்தெருவாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்க வாக்குச் சேகரித்தவர்கள் என்பதுடன் சட்டத்தரணி புலேந்திரன் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் களமிறக்கப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படும் ஒருவராவார்.


  மேலும் மூடிய அறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தனை சந்தித்துள்ளதாகவும் சம்பந்தனின் நெருங்கிய சகாக்கள் மூலம் தமிழ்கிங்டொத்திற்கு வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றது.

  அன்றைய தினம் மாலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை உறுப்பினர்கள் சிலரையும் சந்தித்துப் பேசியிருப்பதாகவும் அச்சந்திப்பில் தனக்கான ஆதரவைத் திரட்ட மணிவன்னண் முனைந்திருந்ததாகவும், அதற்கு திருகோணமலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினா்கள் யாரும் உடன்படாமல் மணிவண்ணனின் கட்சிக்கெதிரான துரோகச்செயலை எதிா்த்தால் மணிவண்ணன் அம்முயற்சியை கைவிட்டுள்ளார். 

  மணிவன்னனின் இச்சந்திப்பின் மூலம் தமிழத் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து பணியாற்ற மணிவன்னன் தயாராகி விட்டார் என சம்பந்தனின் நெருங்கிய சகா ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளாா். மேலும் தோ்தலுக்கு முன்னரும் சில தடவைகள் மணிவண்ணன் திருகோணமலையில் கூட்டமைப்புத் தலைவா்கள் சிலரை சந்தித்துப் பேசியிருந்த நிலையிலேயே தான், கூட்டமைப்பின் மிக முக்கிய உறுப்பினா்கள் மற்றும் ஆதரவாளா்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிப்பதாயின் மணிவண்ணனுக்கு மட்டும் வாக்களிக்குமாறு முகநூலிலும், களத்திலும் பிரச்சாரம் செய்து வந்துள்ளனா் என்பதுடன் அப்பிரச்சாரம் இன்று வரையும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

  இவ்வாறான பின்னணியில் தான் மணிவண்ணன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சிதைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறாா். தனக்கு அதிக இளைஞர் செல்வாக்கு இருப்பதாகவும். தன்னை ஒர் கட்சி என்று கருதி தனி அணியாக தன்னை இணைக்க வேண்டுமெனவும் கோரியுள்ளதாக அறிய முடிகின்றது. அதன் பின்னணியிலேயே தமிழ்த் தேசிய இளைஞா் பேரவை என்ற அமைப்பை மணிவண்ணன் உருவாக்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடதக்கது.

  தொடர்புடைய செய்திகள்

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: அம்பலமாகியது மணிவண்ணனின் இரகசியப் பேச்சுவார்த்தை! Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top