Breaking News

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோருக்கு ஓர் முக்கிய செய்தி!

சாரதி அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட அளவான புள்ளி வழங்கப்பட்டு, பின்னர் சாரதிகள் தவறிழைக்கும் போது அதனை குறைப்பதற்கான திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வீதி பாதுகாப்புக்க பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார். 

இதற்கமைய, வழங்கப்பட்ட புள்ளிகள் பூஜ்சியம் வரை குறைவடையுமாயின் அவ்வாறானவர்களின் சாரதி அனுமதி பத்திரத்தை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது 24 புள்ளிகள் சாரதிகளுக்கு வழங்கப்படுவதுடன், சாரதிகளால் முன்னெடுக்கப்படும் தவறுகளின் அடிப்படையில் புள்ளிகள் குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

வழங்கப்படும் 24 புள்ளிகள் குறைவடைந்த பின்னர், சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்துக்கு தடைசெய்யப்படும் என்றார். 

பின்னர், அந்த சாரதிகள் உடற்பயிற்சி சோத​னையை முடித்ததும் அவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்றார்.