Breaking News

அமெரிக்க டாலருக்கு மாற்று - ஆப்பிரிக்க நாடுகளில் அதிகரிக்கும் பிட்காயின் வர்த்தகம்!

ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, கென்யா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பண மதிப்பு அதல பாதாளத்துக்குச் சரிந்துள்ளதால், பொதுமக்கள் அதிகளவில் பிட்காயின் மூலம் வர்த்தம் செய்யத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக உலக அளவில் நைஜீரியாவில் அதிகளவில் பிட்காயின் வர்த்தகம் வளர்ந்து வருகிறது.  

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் பொருளாதாரம் எண்ணெய் வளத்தை அடிப்படையாகக் கொண்டது. உலகளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நைஜீரியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. இந்த ஆண்டில் மட்டும் இரண்டு முறை நைஜீரியா மத்திய வங்கி நைஜீரியன் நாணயமான நைராவின் மதிப்பைக் குறைத்தது. இந்தப் பொருளாதாரத் தாக்கமானது, நைஜீரிய மக்களின் நிதி சார்ந்த பார்வையையே முற்றிலும் மாற்றியுள்ளது. 

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நைரோவின் மதிப்பு வீழ்ச்சியடைந்த பிறகு பொது மக்கள் பிட்காயின் குறித்து யோசிக்கத் தொடங்கினர். மதிப்பிழந்த நைராவை அதிகளவுக்குக் கொடுத்து டாலரை வாங்கிப் பயன்படுத்துவதற்குப் பதில், பொதுமக்கள் நேரடியாக பிட் காயினைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.     

அதன் விளைவாக, ஜூன் மாதத்தில் மட்டும் நைஜீரியாவில் 55 மில்லியன் டாலர் அளவுக்கு பிட்காயின் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 50 சதவிகிதம் அதிகம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் நைஜீரியாவில் தான் தற்போது பிட்காயின் வர்த்தகம் அதிவேகமாக வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. பிட்காயின் குறித்த கூகுள் தேடலிலும் நைஜீரியாவே முன்னணி வகித்துள்ளது. 


நைராவின் வீழ்ச்சியானது பொதுமக்களை பிட்காயினை நோக்கி நகர்த்திவிட்டது. இதனால், கடல்கடந்து மற்ற நாடுகளுடன் மேற்கொள்ளும் வர்த்தகத்துக்கு பிட்காயினைப் பயன்படுத்தி வருகின்றனர். 

நைஜீரியாவில் பிட் காயினைப் பயன்படுத்தி சீனா, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் மொபைல் போன்கள் மற்றும் உதிரி பாகங்களை வாங்கி உள்ளூரில் விற்றுவரும் ஒடுஞ்சோ, “ஒவ்வொரு மாதமும் மூன்று அல்லது நான்கு முறைக்கு மேல் 0.5 லிருந்து 0.7 வரை பிட்காயினை ஷாங்காய் நகருக்கு அனுப்பி வைக்கிறேன். பிட் காயினைப் பயன்படுத்துவது எங்கள் வர்த்தகத்தை எளிதாக்கிவிட்டது. 

மதிப்பிழந்த நைராவைக் கொடுத்து டாலரை வாங்கும் போது பணப்பரிமாற்றக் கட்டணம் விதிக்கப்படுகிறது. ஆனால், பிட் காயினுக்கு இந்தப் பிரச்னை இல்லை. பிட் காயினை வாங்கும்போது நைராவை டாலருக்கு மாற்ற வேண்டிய அவசியம் எதுவும் இல்லை” என்று கூறியுள்ளார். 

நைஜீரியாவுக்கு அடுத்து தென் ஆப்பிரிக்கா, கென்யா, கானா, டான்சானியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகள் பிட் காயின் வர்த்தகத்தின் முன்னணியில் உள்ளன...