ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பிரதேச மக்களுக்கான முக்கிய அறிவித்தல்!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள பகுதிகளில் நாளை (16) காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பல்பொருள் அங்காடிகள் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருள் விற்பனை நிலையங்கள் தற்காலிகமாக திறக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது உருவாகியுள்ள கொரோனா தொற்று மூன்றாவது அலை காரணமாக கம்பஹா மாவட்டத்தில் 19 பொலிஸ் அதிகாரப் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.