Breaking News

அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்!

பருப்பு, சீனி, பெரிய வெங்காயம், ரின் மீன் ஆகியவற்றின் இறக்குமதி வரியை நேற்று முன்தினம் முதல் நீக்கியமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத்திற்கு கிடைக்க பெற்றுள்ளது. 

அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உடனடியாக குறைக்க முடியாது என அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. 

அந்த சங்கத்தின் தலைவர் ஜீ.ராஜேந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.  

கையிருப்பில் உள்ள பொருட்கள் முடிவடையும் வரை பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.  

தற்போதைய வாழ்க்கை செலவு மற்றும் கொவிட்-19 நிலைமையை கருத்திற்கொண்டு பருப்பு, ரின் மீன், பெரிய வெங்காயம், சீனி ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி வரியை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அரசாங்கம் நீக்கியுள்ளது.