Breaking News

முரளிதரன் 800 படத்தில் நடிப்பதை விஜய்சேதுபதி தவிர்க்க வேண்டும் - இயக்குநர் பாரதிராஜா


இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக் படமான 800 திரைப்படத்தில் நடிப்பதை நடிகர் விஜய் சேதுபதி தவிர்க்க வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார். 

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஈழத்தமிழர்கள் செத்து மடிந்த போது, பிடில் வாசித்து, சிங்கள இனத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர் முத்தையா முரளிதரன் எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதேபோன்று, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதன் மூலம் அறியாமையால் விஜய்சேதுபதி துரோக வரலாற்றுக்கு துணைபோக முனைவதாகவும், தமிழர்களின் எதிர்ப்பை மீறி இந்தப்படத்தில் விஜய்சேதுபதி நடித்தால் இழிதுரோக வரலாற்றில் இடம் பெறுவார் என எச்சரித்துள்ளார்.