Breaking News

கொரோனா முதலில் எங்கு உருவானது – சீன புதிய தகவல்!

உலகின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு இருந்ததாகவும், எனினும் சீனாவே கொரோனா குறித்து உலகிற்கு முதலில் தகவலைப் பரிமாறியதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உலகின் 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில் சீன நாட்டின் வூஹான் மாகாணத்தில் முதன்முதலில் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.  

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் சீன அரசு திட்டமிட்டு கொரோனா வைரஸைப் பரப்பியுள்ளதாக தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் சீன அரசு புதியத் தகவலை தெரிவித்துள்ளது.  

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங், கொரோனா வைரஸ் புதிய வகை வைரஸ் என்றும் அது தொடர்பான பல உண்மைகள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன என்றும் கூறியுள்ளார்.  

உலகின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாகவும், எனினும் சீன அரசு மட்டுமே முதன்முதலில் அதனை உலகத்திற்கு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

உலகம் முழுவதும் இதுவரை 3 கோடியே 71 இலட்சத்து 76 ஆயிரத்து 40 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.