வடக்கில் கொரோனா காரணமாக இரண்டு பிரதேசங்கள் Lockdown!
வடக்கின் மன்னார் மாவட்டத்தில் பட்டிதோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரையில் குறித்த பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் 5 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் கடந்த வெள்ளிக்கிழமை இனம் காணப்பட்ட கொனோரா தொற்று நோயாளி ஒருவரைத் தொடர்ந்து மேலும் ஐந்து நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டி. வினோதன் தெரிவித்தார்.
வெளி மாவட்டத்திலிருந்து கட்டிட வேலைக்காக மன்னார் பட்டித்தோட்டப் பகுதிக்கு வந்திருந்த நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை கடந்த வியாழக்கிழமை (08) கண்டு பிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பட்டித்தோட்டம் பகுதியில் அடையாளம் காணப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.