நாட்டில் கொரோனா அறிகுறிகள் இன்றி அடையாளம் காணப்பட்ட 90 சதவீதமான தொற்றாளர்கள்!
நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களில் 90 வீதமானவர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்படவில்லை என சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் மருத்துவர் சஞ்ஜீவ முனசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் பரவியிருந்த கொரோனா வைரஸ் தொற்றை விட இம் முறை இனங்காணப்பட்டுள்ள வைரஸ் தொற்றானது வேகமாக பரவக்கூடியதும் மிகவும் வீரியம் வாய்ந்ததெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலத்தில் நோய் அறிகுறிகள் தென்பட்டால் வைத்திய சாலைக்குச் செல்ல முன்னர் 011 7 966 366 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து அறிவிக்குமாறு சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.