'பா.ரஞ்சித் - ஆர்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - THAMILKINGDOM 'பா.ரஞ்சித் - ஆர்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - THAMILKINGDOM

 • Latest News

  'பா.ரஞ்சித் - ஆர்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு!


  'கபாலி', 'காலா' படத்திற்குப் பிறகு பா.ரஞ்சித், ஆர்யாவை வைத்து படம் இயக்கி வருகிறார். இப்படம், வடசென்னை குத்துச்சண்டை வீரர்களை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இது, 1980 -களில் நடப்பது போன்ற கதைக்களத்தை கொண்ட படம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

  தீபாவளிக்கு முன்பே, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என ஆர்யா கூறியிருந்தார். தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள்ளது. 

  இயக்குனர் பா.ரஞ்சித், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆர்யாவின் முப்பதாவது படமாக உருவாகியுள்ள, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டிசம்பர் 2 -ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: 'பா.ரஞ்சித் - ஆர்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு! Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
  Scroll to Top