Breaking News

புளித்த பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு உச்சகட்ட போதையான அணிலின் வைரல் வீடியோ!


அமெரிக்காவில் புளித்த பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்ட அணில் ஒன்று போதை தலைக்கேற நின்ற காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. மின்னசொட்டா மாகாணத்தில் ஒருவர் தான் வைத்திருந்த புளித்து கெட்டுப்போன பேரீச்சம் பழங்களை தனது தோட்டத்தில் வைத்திருந்தார்.

அதனைக் கண்ட அணில் ஒன்று ஆர்வமாக அதனைச் சாப்பிட, பழத்தில் ஏற்பட்ட வேதிவினை காரணமாக போதை உண்டானது. 



அதீத ஆர்வத்தின் காரணமாக ஏராளமான பழங்களைக் சாப்பிட்ட அணில், பழங்கள் வைக்கப்பட்டிருந்த கோப்பையைப் பிடித்தபடி போதையுடன் தள்ளாடியபடி நின்றது.