திட்டுனிங்களே, ஞாபகம் இருக்கா பாலாஜி: வச்சு செய்யும் கமல்ஹாசன்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமலஹாசன் தனது பிறந்தநாளை கொண்டாடும் நிகழ்வுகள் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் பாலாஜி உள்பட ஒருசிலரை கமலஹாசன் வச்சி செய்வது இன்றைய நிகழ்ச்சியை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக முதலில் ’இப்போது நீங்கள் எந்த மூடில் இருக்கின்றீர்கள், சண்டை மூடா அல்லது சமாதான மூடா’ என அர்ச்சனாவிடமும், ’போட்ட சண்டைக்கு பதில் சொல்லியே ஆகணு’ம் என்று சனம்ஷெட்டியையும் வச்சு செஞ்ச கமல்ஹாசன், அதன்பின்னர் ’நிறைய சண்டைகள் இருக்கு ஒவ்வொரு சண்டையாக போகலாம் என்று நினைக்கிறேன்’ என்று அவர் கூறும்போது பாலாஜி சிரித்துக் கொண்டிருந்தார். அப்போது ’சிரிப்பை கொஞ்சம் ஆஃப் பண்ணிடுங்க பாலாஜி. நீங்க திட்டினிங்கள்ள, என்னன்னு ஞாபகம் இருக்கா? அது என்ன வார்த்தைன்னு தெரியுமா’ என்று கூற, அதற்கு பாலாஜி அதிர்ச்சி அடைந்து தலையை மட்டும் ஆட்டுகிறார்.
அதன் பிறகு மீண்டும் ’நான் சிரிப்பை மட்டும்தான் குறைக்கச் சொன்னேன், பேச்சை குறைக்க சொல்லலியே’ என்று கூற பாலாஜிக்க்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சியில் பாலாஜி உள்பட ஒருசிலருக்கு சரியான ஆப்பு இருக்கிறது என்று மட்டும் தெரிய வருகிறது.
#BiggBossTamil இல் இன்று.. #Day34 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/VqinKjH2cx
— Vijay Television (@vijaytelevision) November 7, 2020