பிக் பாஸில் இந்த வார எலிமினேஷன் இவர் தான்? யாருமே எதிர்பார்க்காதது!
பிக் பாஸ் 4ல் இருந்து இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா ஆகிய 4 பேர் தான் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் அதிக அளவு பிரச்சனைகள் நடந்து வரும் நிலையில் எலிமினேஷன் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது.
இந்த வாரம் மொத்தம் 7 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருக்கிறார்கள். ஆரி, பாலா, சோம் சேகர், ஜித்தன் ரமேஷ், சனம் ஷெட்டி, சம்யுக்தா மற்றும் நிஷா என ஏழு பேர் இருக்கும் நிலையில் சனிக்கிழமை எபிசோடில் கமல் இருவரை காப்பாற்றிவிட்டார்.
ஆரி மற்றும் பாலாஜி இருவரும் நாமினேஷனில் இருந்து தப்பிய நிலையில், தற்போது பரவி வரும் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் சம்யுக்தா தான் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார் என்பது தான்.
கடந்த வாரம் முழுவதும் சம்யுக்தா பேசிய பல விஷயங்கள் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவரை டம்மி மம்மி என்று கூட கிண்டல் செய்து வந்தனர். மேலும் வளர்ப்பு வளர்ப்பு என அடிக்கடி பேசும் அவரை நெட்டிசன்கள் வெறுத்தெடுத்தார்கள் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.