தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளையுடன் நீக்கம்!
மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை காலை 5 மணியுடன் கட்டாயமாக நீக்குவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதோ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இருப்பினும் கொழும்பில் இனங்காணப்பட்ட 12 பொலிஸ் பிரிவுகள் மற்றும் ஆபத்தான பகுதிகளாக இனங்காணப்பட்டுள்ள தொடர்மாடி கட்டிடங்கள் சிலவற்றை தனிமைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் குறித்த பகுதிகளில் இருந்தே இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குருணாகல், குளியாபிட்டிய, கேகாலை மற்றும் மாவனெல்ல பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமும் நாளை காலை 5 மணியுடன் நீக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.