Breaking News

ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் வழங்குவதில் புதிய நடைமுறை!


ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் வழங்குவதில் புதிய நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் பொலிஸ் தலைமையகத்தினால் ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் விஷேட சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. 

அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரமாக கருதும் நடைமுறை ஒன்று இதனூடாக முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தக்கூடிய 80 நிறுவனங்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.